உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்திருக்க கூடிய கழகத் தலைவன் திரைப்படமானது காற்று மாசுபடுதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய புதுமையான திரைப்படம் எனக் கூறலாம்.
இந்த திரைப்படத்தை உதயநிதி தனது ரெட் லைட் மூவி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இவர் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் அபாரமான தோற்றத்தில் மிக அற்புதமான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தை மகிழ்த்திருமேனி இயக்கியிருக்கிறார். மேலும் படத்தில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கூறலாம்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பை செதுக்கியிருக்கிறார் மகிழ் திருமேனி என்றுதான் கூற வேண்டும். இவர் சிறந்த முறையில் ஆண்ட கதாபாத்திரத்திற்கு தக்கபடி நடிகர்களை தேர்வு செய்து இருப்பது படத்திற்கான பிளஸ் பாயிண்ட் எனக் கூறலாம்.
இப்படி பல பிளஸ் பாயிண்டுகளை படம் கொண்டு இருந்தாலும் ஆங்காங்கே சில மைனஸ் பாயிண்டுகளும் தான் உள்ளது. இந்தத் திரைப்படமானது வெளி வந்த ஒரே நாளில் சுமார் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .
சமீப காலமாக சினிமாவில் வெளிவரும் அனைத்து படங்களையும் உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பார்க்கும்போது கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது அதுபோலவே பிரதீப் ரங்க நாதனின் லவ் டுடே படம் வசூலை வாரி தந்தது.
இதில் என்ன சிக்கல் என்றால் உதயநிதி படமானது ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாயை மட்டும் தான் வசூல் செய்துள்ளது என்ற பேச்சு பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பி பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளதாக கூறி வருகிறார்கள்.