வெடிய போடுடா… அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கலகத்தலைவன் டீசர் வெளியானது…!

ரெட் ஜெய்ண்ட மூவியின் நிர்வாக பொறுப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

 அந்த திரைப்படங்கள் பெருவாரியான வெற்றியை தந்ததோடு இவரை மக்கள் முன்னிலையில் நல்ல பெயரையும் பெற்றுத் தர உதவியது. அதனை அடுத்து இவர் திரை துறையோடு நின்றுவிடாமல் அரசியலிலும் களம் கண்டார்.

தற்போது தமிழ்நாட்டில் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள கலகத் தலைவன் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி விட்டது.

இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் இவரது நடிப்பு சொல்லும் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்தது அதோடு சந்தானத்துடன் இணைந்து இவர் காமெடி டிராக்கில் கலகலப்பாய் கலக்கியிருப்பார்.மேலும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார்.

மேலும் மீகாமன் ,தடம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில்  இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

 இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸில் அனைவரையும் கலக்கி வந்த ஆரவ் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

 மேலும் கழகத் தலைவர் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமாக  கேரக்டர் ரோலில் உதயநிதி நடித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இதனை அடுத்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் இதனையடுத்து தற்போது கழகத் தலைவர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது என்பதை தற்போது இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விரைவில் இந்த படம் வெளிவந்து சக்கை போடு போடும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்வதோடு வசூலையும் வாரி குவிக்கும் என்று கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …