சந்தானத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்த காதல்..! பேட்டியில் உடைத்த உதயநிதி.!

பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது பலருக்கும் பெரிய ஆசையாக இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் சினிமாவில் பிரபலமாகும் நபர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது தொழிலதிபர்களுக்கு கூட இருப்பது கிடையாது.

இதனால் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் கூட சினிமாவில் பிரபலமாக ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவின் மீதுதான் ஆர்வம் காட்டி வந்தார். சினிமாவில் நடித்த காலங்களில் அவர் எந்த காலத்திலும் கட்சியில் சேர மாட்டேன் என்றெல்லாம் கூறி வந்து கொண்டிருந்தார்.

நடிகர் உதயநிதி

ஆனால் தற்சமயம் கட்சியிலும் முக்கிய பணியில் இருந்து வருகிறார் உதயநிதி. உதயநிதி திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பிறகு எடுத்த உடனே ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கொடுக்காது.

மேலும் மக்கள் ஒரு நபரை எடுத்த உடனே ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்தார். மேலும் உதயநிதிக்கு ஆவரேஜாகதான் அப்பொழுதெல்லாம் நடிக்க வரும். இந்த காரணத்தினால் அவர் காமெடி திரைப்படங்களை தேர்ந்தெடுத்தார்.

சந்தானத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்த காதல்

அந்த வகையில் அவர் நடித்த திரைப்படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சந்தானம்.

நடிகர் சந்தானமும் உதயநிதியும் சேர்ந்து செய்யும் காமெடிகள் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தன. இந்த நிலையில் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை உதயநிதி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

பேட்டியில் உடைத்த உதயநிதி

அதில் அவர் கூறும்பொழுது ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை முழுதாக எடுத்து எடிட் செய்து விட்டு பார்த்தபோது 5 மணி நேரத்திற்கு அதிகமாக இருந்தது. இவ்வளவு நேரம் இருக்கும் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதால் படத்தை வெகுவாக குறைத்தோம்.

அந்த சமயத்தில் இசையமைப்பாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் கூறும் பொழுது இது ஒரு புது இயக்குனரின் படம். படத்தில் சண்டை காட்சிகள் கூட இல்லை. மக்கள் இவ்வளவு நேரமெல்லாம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள் அதில் நிறைய காட்சிகளை எடுத்து விடுங்கள் என்று கூறினார்.

அந்த படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் சும்மா ஒரு காட்சிக்கு மட்டும் வருவது போல இருக்கும். ஆனால் உண்மையில் 25 நாள் அந்த படத்திற்காக ஆண்ட்ரியா நடித்தார். ஆண்ட்ரியாவிற்கும் சந்தானத்திற்கும் தனியாக காதல் காட்சிகள் படத்தில் இருந்தன. ஆனால் படத்தில் நிறைய காட்சிகளை எடுக்க வேண்டி இருந்ததால் அந்த காட்சிகளையும் நீக்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார் உதயநிதி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version