கால தாமதமாக உணவினை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சர் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் எந்த நோயால் தினம் தினம் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் வரை வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை பாதிப்படைகிறார்கள்.
இந்த அல்சர் நோயை இயற்கையான வழியில் வீட்டு வைத்தியத்தின் மூலம் எப்படி சரி செய்வது என்பது பற்றி இக்கட்டுறையில் காணலாம்.
அல்சரை குணப்படுத்தும் மணத்தக்காளி
கீரை வகைகளில் ஒன்றாக திகழக்கூடிய மணத்தக்காளி கீரையில் எண்ணற்ற சத்து உள்ளது மேலும் இந்தக் கீரையில் இருக்கக்கூடிய இளம் கசப்பானது அல்சர் நோயை தீர்க்கக் கூடிய அருமருந்தாக பயன்படுகிறது இன்னும் கிராமப்புறங்களில் வாயில் புண் ஏற்பட்டால் எந்த கீரையின் சாறை எடுத்து வாய் முழுவதும் தேய்த்து விடுவதோடு ஐந்து நிமிடங்கள் அந்தச் சாரினை வாயில் அப்படியே வைத்திருப்பார்கள்.இதன் மூலம் வாய் புண் குணமாகும். இந்தக் கீரையை சமைத்து உண்பதால் உங்கள் குடல் மற்றும் வயிற்றில் இருக்கக் கூடிய புண்கள் விரைவாக குணமாகும்.
அல்சரை குணமாக்கும் தேங்காய் பால்
நன்றாக முத்தி இருக்கும் தேங்காயை துருவி அதிலிருந்து தேங்காய் பாலை எடுத்து அருந்தி வர வாய்ப்புண் வயிற்றுப்புண் குடல் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும் தேங்காய் பால் எடுக்க முடியாதவர்கள் பச்சை தேங்காயை அப்படியே மென்று தின்றால் போதுமானது இவ்வாறு நீங்கள் செய்வதின் மூலம் அல்சர் நோயிலிருந்து விடுதலை அடையலாம்.
அல்சரை குணப்படுத்தும் அகத்திக்கீரை அல்சர் நோயை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் அகத்திக்கீரைக்கு உண்டு தினமும் இந்த அகத்திக் கீரையை ஒரு கப் சாப்பிட்டு வர உங்கள் அல்சர் நோய் குணமாகும் மேலும் இந்தக் கீரையை சூப்பாக செய்து உண்பதின் மூலம் அதிக அளவு பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
அல்சரை நீக்கும் மலை நெல்லிக்காய்
அல்சர் நோய் இருப்பவர்கள் தினமும் மலநெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம் அல்லது மன நெல்லிக்காயை மிக்ஸியில் நன்றாக அடித்து அதனுடன் மோர் அல்லது தயிர் கலந்து தினமும் குடிக்க அல்சர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அல்சரை நீக்கும் மாசிக்காய்
மாசிக்காயை நன்கு மருந்து கல்லில் உரைத்து அதை ஒரு சங்கு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து தினமும் குடிப்பதின் மூலம் உடலில் இருக்கக்கூடிய புண்கள் குணமாகும்.