” ஐந்து நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா..!” – அப்ப இத செய்து பாருங்க..!!

இன்று அழகுக்கு அதிக அக்கறை காட்டி வரும் ஆண்களும், பெண்களும் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடிய முடிகளை நீக்க வேண்டும் என்று பல வழிமுறைகளை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

 குறிப்பாக இவர்கள் ஷேவிங் மூலமே இந்த அக்குள் முடிகளை நீக்கி வருகிறார்கள். இன்னும் சில பேர் வேக்சிங் முறையை பின்பற்றி அந்த பகுதியில் இருக்கக்கூடிய முடிகளை அகற்றி வருகிறார்கள்.

இதன் காரணமாக அந்த பகுதியில் அவர்களுக்கு அலர்ஜி மட்டுமில்லாமல் அரிப்பு புண்கள் தோன்றுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. எனவே இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்க சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 அக்குள் முடியை நீக்க தேவையான பொருட்கள்

  1. சர்க்கரை 2 கப்
  2. எலுமிச்சை சாறு கால் கப்
  3. தண்ணீர் கால் கப்
  4. தேன் கால் கப்

செய்முறை

💐 பாத்திரத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.  நீர் நன்கு கொதிக்க அதில் நீங்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஸ்விம்மில் போட்டு இதனைக் கொதிக்க விடுங்கள்.

💐 இந்த கலவையானது எப்போது கருமை நிறமாக மாறி வருகிறதோ அப்போது கலவை கெட்டியாக கூடிய நிலையை எட்டியவுடன் அடுப்பை ஆப் செய்து விடுங்கள். இந்த கலவையை நன்கு குளிர்ச்சியாகும் வரை விட்டு விடுங்கள்.

💐 அது குளிர்ச்சி ஆனவுடன் நீங்கள் உங்கள் அக்குளை நீரால் கழுவி காட்டன் துணியால் துடைத்து உலர்த்துங்கள். இதனை அடுத்து அந்த கலவையை ஒரு ஐஸ் குச்சியை கொண்டு நன்கு கிளறி எடுத்து உங்கள் அக்குள் பகுதியில் அப்ளை செய்து விடுங்கள்.

 💐இந்தக் கலவை காய்ந்த பின் மிகவும் வேகமாக உரித்து விடுங்கள். நீங்கள் மெதுவாக வலி எடுக்கிறது என்ற எண்ணத்தில் அதை உரிக்கும் பொழுது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேகமாக உரித்து எடுத்த பின்னால் அந்தப் பகுதியை சோப்பை கொண்டு நன்கு கழுவி விடவும்.

💐 பின் துணியால் துடைத்து விட்டு மாய்ஸ்ரைசர் ஏதேனும் இருந்தால் அதை தடவி விடுங்கள் இந்த வழியை நீங்கள் ஃபலோ செய்து பாருங்கள் கட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …