மூன்று முறை த*கொலை முயற்சி.. பாக்யராஜ் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் அவரைப் போலவே திரைக்கதை எழுதுவதில் சிறப்பான நபராக இருந்தார்.

அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது. பொதுவாகவே பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருக்கும் இயக்குனர்கள் அனைவரும் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் கூட அவர்களால் சிறப்பான ஒரு திரைப்படத்தை இயக்க முடியும்.

இதனால்தான் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்து வந்தது .அதனால்தான் பாக்கியராஜுக்கும் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்து வந்தது. சொல்ல போனால் அப்பொழுது லோகேஷ் கனகராஜிற்கு இணையான ஒரு இயக்குனராக பாக்கியராஜ் இருந்தார் என்று கூறலாம்.

திரைக்கதை மன்னன்:

அந்த அளவிற்கு திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் பாக்யராஜ் அவரது முதல் திரைப்படமான சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மட்டும்தான் கொஞ்சம் சோகமான முடிவை கொண்ட திரைப்படமாக இருக்கும்.

மற்றபடி பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் கலகலப்பான திரைப்படங்களாகதான் இருக்கும். இதனாலேயே பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக பாக்கியராஜ் இருந்து வந்தார்.

இதற்கு நடுவே பாக்யராஜின் முதல் மனைவி உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டார். அதனை தொடர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அந்த படத்தின் கதாநாயகியான பூர்ணிமாவை காதலித்தார் பாக்யராஜ்.

அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பாக்யராஜுக்கு அதனை தொடர்ந்து சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு பெரும்பாலும் பலரும் அறிந்த ஒருவராவார்.

பாக்கியராஜ் குடும்பம்:

ஏனெனில் அவரும் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பாக்கியராஜின் மகளை குறித்து பலருக்கும் பெரிதாக தெரியாது பாக்யராஜின் மகளான சரண்யா பாரிஜாதம் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.

பிறகு சினிமா துறையில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை சரண்யாவுக்கு தற்சமயம் 38 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த காதல் தோல்வியின் காரணமாக மூன்று முறை தற்கொலைக்கு அவர் முயற்சி செய்ததாகவும் பேச்சு உண்டு.

பாக்யராஜ் இவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தும் அவரது வீட்டிலேயே இப்படி ஒரு சோகம் நடந்து இருக்கிறது. இதனால் சில காலங்கள் அவரது புகைப்படங்கள் கூட எதுவும் சமூக வலைதளங்களில் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் வெகு காலங்கள் கழித்து அவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சாந்தனு தாயார் பூர்ணிமா மற்றும் சரண்யா மூவரும் இருக்கும் அந்த புகைப்படம் இப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version