டி.ராஜேந்தர் தாடிக்கு பின்னால் இப்படி ஒரு வேதனையா..? பலரும் அறியாத வேதனை தகவல்..!

தமிழ் திரை உலகில் தன்னை மட்டுமே நம்பி தன் திறமையை காட்டி பன்முக திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த டி.ராஜேந்தர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் லிட்டில் ஸ்டார் சிலம்பரசனின் தந்தை.

டி ராஜேந்திரன் பேசக்கூடிய தமிழில் எதுகை, மோனை நிறைந்திருக்கும். இவர் தற்போது தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த சமயத்தில் இவரது தாடிக்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை தெரிவித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

டி.ராஜேந்திரன்..

ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் இண்டஸ்ட்ரியல் அறிமுகமான டி ராஜேந்திரன் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் வசனம் எழுதுவது, இசை அமைப்பது, நடிப்பது என பன்முகத் திறமையால் அனைவரையும் ஈர்த்தவர்.

தன்னைப் போலவே தன் மகனையும் உருவாக்க நினைத்த இவர் சிலம்பரசனை குழந்தை நட்சத்திரமாக திரை உலகை அறிமுகம் செய்து வைத்ததை அடுத்து இன்று உச்சகட்ட நட்சத்திரம் என்ற பெயரோடு இருப்பதாமல் இளம் வயதிலேயே திரைப்படத்தை இயக்கவும், இசை அமைக்கவும், பாடல் எழுதக்கூடிய திறனை பெறவும் முடிந்தது.

டாடிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வேதனை..

காலங்கள் மாறி எவ்வளவு தான் தொழில்நுட்பம் திரை துறையில் நுழைந்து இருந்தாலும் டி. ராஜேந்திரனுக்கு என்றும் திரைப்படத்துறையில் தனி இடம் உள்ளது என்று சொல்லலாம். அதற்கு உதாரணமாக அவர் வீராசாமி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

ஆரம்ப காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த டி ராஜேந்திரன் வறுமை காரணமாக சாக்கடை ஓரமாக நின்று கொண்டு தியேட்டருக்கு வெளியே பாடல்களையும், வசனத்தையும் கேட்டு வளர்த்ததார்.

அத்தோடு தனது முதல் படத்தின் தயாரிப்பாளர் இப்ரஹாம் வீட்டு தோட்ட வேலைகளை செய்து முதல் படத்தில் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தாலும் அந்த படத்தில் டி ஆரின் பெயர் இடம் பெறவில்லை.

யாரும் அறியாத தகவல்..

எனினும் மனம் தளராத டி ராஜேந்திரன் அடுத்தடுத்து படங்கள் வெற்றியை கொடுத்து தனக்கான ஒரு ஆளுமையை வளர்த்துக் கொண்ட இந்நிலையில் இவர் தாடிக்கு பின் இருக்கும் கதை பற்றி பேசி இருக்கிறார்.

பலரும் காதல் தோல்வியால் தான் இவர் தாடி வைத்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. கல்லூரிக்கு சேரும் போது தனது தாடியை ஷேவ் செய்ய முடிவெடுத்து இருக்கிறார் டி ராஜேந்திரன்.

இதனை அடுத்து இவரது உறவினர் ஒருவன் இவன் மூஞ்சிக்கு எல்லாம் ஷேவிங் ஒரு கேடா என்ற வார்த்தையை கேட்க மனதில் ஏற்பட்ட வலியை அடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு தான் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

ஆனால் சினிமாவில் அவர் நினைத்த படி வெற்றியை பெற்றுத் தந்த இந்த தாடியை ஏன் எடுக்க வேண்டும் அது அப்படியே இருக்கட்டும் என்ற முடிவில் இன்று வரை தாடியை எடுக்காமல் இருப்பதாக சொல்லிய விஷயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரும் பேசும், பேசும் பொருளாக மாறி உள்ளது என்றால் அதில் ஆச்சிரியப்பட ஏதுமில்லை.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version