ஒரு பாடல்.. வேலை செஞ்ச நாலு பேரும் டைவர்ஸ்.. அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை. அது போல ஓரு செகண்டில் காதல் வந்தும் பட் என்று திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே டைவர்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் வரிசையில் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடம் பிடித்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒரு பாடலுக்காக வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கக் கூடிய நிலையை கண்டறிந்திருக்கும் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆகிவிட்டார்கள்.

ஒரு பாடலுக்காக வேலை செய்த 4 பேர் டைவர்ஸ்..

அந்த வகையில் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிக்கு அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அறிவித்திருக்கின்ற அறிவிப்பு பேரடியாக ரசிகர்களின் மனதில் பாய்ந்து விட்டது. இந்த இரண்டு ஜோடிகளும் இணைந்து காதலர்கள் கொண்டாட கூடிய பாடல்களை பாடி அசத்தியதோடு ஜிவிபி இசையிலும் கலக்கியிருப்பார்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த ஏராளமான பாடல்களை சைந்தவி பாடி இருக்கிறார். குறிப்பாக விழிகளில் ஒரு வானவில், எள்ளு வய பூக்கலையே, ஆருயிரே ஆருயிரே, யாரோ இவன் யாரோ, வெண் மேகம் போலவே நீ என அடுக்கிக் கொண்டு போகலாம்.

அட கொடுமைய..

அந்த வகையில் நடிகர் தனுஷை வைத்து அவரது சகோதரன் செல்வராகவன் இயக்கிய படம் மயக்கம் என்ன. 2011-ஆம் ஆண்டு வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தில் இடம் பிடித்த பிறை தேடும் இரவிலே என்ற பாடலை தனுஷ் எழுத, அந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இந்த பாடலை சைந்தவி பாடியிருப்பார். காதலர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கும் இந்த பாடல் அவர்களின் பர்சனல் பாடலாகவும் திகழ்ந்தது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்தப் பாடலுக்காக வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கக் கூடிய விஷயத்தை ரசிகர்கள் கண்டறிந்து தற்போது இணையத்தில் வைரலாக்கி விட்டார்கள்.

தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகாஸ்..

அந்த வகையில் இந்த படத்தை இயக்கிய செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். இதனை அடுத்து தனுஷ் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து தேவை என தற்போது நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.

அத்துடன் இந்த லிஸ்டில் ஜிவி பிரகாஷ், சைந்தவியும் இணைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் அழகான பாடலை உருவாக்கித் தந்த இந்த நான்கு பேருக்கும் விவாகரத்து நடந்திருப்பது நினைத்து இந்த பாடலில் ஒரு சோகமான ஒற்றுமை இருப்பதாக நெடிசன்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

தற்போது இந்த விஷயம் தான் இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version