மலையாள திரைப்படத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை ஊர்வசி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.
தமிழைப் பொறுத்த வரை இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
நடிகை ஊர்வசி..
அந்த வகையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு நடித்து பல விருதுகளைப் பெற்றிருக்கக் கூடிய இவர் ஒரு மிகச்சிறந்த குணசித்திர நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் காமெடியில் தமிழில் கலக்கி இருக்கிறார்.
அந்த வகையில் இவர் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்த படங்களில் ஒன்று தான் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்தது. இந்த படத்தில் இவர் திரிபுரசுந்தரி ஆக நடித்து அடித்த லூட்டியை எவராலும் மறக்க முடியாது.
ஸ்கூல் படிக்கும்போதே..
இதை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ஊர்வசி ஸ்கூல் படிக்கும் போது நடந்த விஷயத்தை பற்றி பேசி அனைவரையும் வாய் அடைக்க வைத்திருக்கிறார்.
மேலும் இவர் சொல்லுவதற்கே கூச்சமாக உள்ளது என்று சொன்ன முக்கியமான விஷயமானது ஸ்கூல் படிக்கும் போதே சினிமாவில் நடிக்க வந்து விட்டதாகவும், இதனால் தான் கல்லூரியில் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறுகிறார்.
மேலும் முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் போது படிப்பு தான் முக்கியம். அந்த நேரத்தில் நடிப்பு, பாடல் பாடுவது என மீடியாவில் பிஸியாகி விட்டால் பள்ளியில் இருந்து துரத்தி விடுவார்கள்.
ஆனால் இப்போது நிலைமையை வேறு பள்ளிகளிலேயே நிறைய பங்களிப்புகளை படிக்கும் திறனற்ற மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
மாணவர்கள் படிக்கச் சென்றாலோ அல்லது நடிக்கச் சென்றாலோ பாடல் பாட சென்றாலோ அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உண்டான நோட்ஸ் கொடுத்து அவர்களை படிக்கச் செய்வதற்கான வழி முறைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள்.
சொல்லுவதற்கு கூச்சமா இருக்கு..
ஆனால் தான் படிக்கும் காலத்தில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இல்லை. தற்போது பள்ளிகளின் தரம் உயர்ந்து இருக்கிறது. டெக்னாலஜி மேலும் உயர்ந்துள்ளது. இதனால் தான் படித்துக் கொண்டே நடிக்கவும் செய்கிறார்கள்.
ஆனால் நான் நடிக்க வந்த கால கட்டத்தில் அப்படியான வாய்ப்புகள் இல்லாததால் தான் என்னால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் பள்ளியிலேயே என்னுடைய படிப்பை முடித்து விட்டேன். இதனை அடுத்து சினிமாவிற்கு நடிக்க வந்து விட்டேன்.
எனவே கல்லூரிக்கு செல்லவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்ய செய்வது. எனக்கு இதனை சொல்வதற்கு கூச்சமாகவும் உள்ளது.
நான் பள்ளி படிப்பை கூட முழுமையாக படிக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டும் தான் படித்திருக்கிறேன். அதனை அடுத்து நடிக்க வந்து விட்டேன் என கூறி இருக்கிறார் நடிகை ஊர்வசி.
இதனை அடுத்து நடிகை ஊர்வசி தான் படிக்காததை நினைத்து கவலையோடு சொன்ன விஷயத்தைப் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களோடு இது பற்றிய பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் கல்வி என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று அதை இழந்து தவிப்பதை ஊர்வசி வெளிப்படையாக சொல்லி இருப்பது பலருக்கும் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.