தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழை தாண்டி மலையாளம். தெலுங்கு. கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக அந்தஸ்து பிடித்திருந்தார்.
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஊர்வசி முதன் முதலில் தமிழ் சினிமாவில் கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
நடிகை ஊர்வசி:
அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்ததே தன்னுடைய அக்காவான கல்பனாவால் தான் என அவரை பேட்டி கூறியிருக்கிறார் .
அதாவது, முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஹீரோயினாக கல்பனாவை தான் கே பாக்யராஜ் முதலில் தேர்வு செய்திருந்தார்.
அப்படத்தின் ஆடிஷனுக்காக கல்பனாவை வரவைத்த போது கல்பனா உடன் சேர்ந்து அவரது சகோதரியான ஊர்வசி பள்ளி சீருடையிலேயே வந்திருக்கிறார்.
அப்போது டயலாக் பேப்பரை கல்பனாவிடம் கொடுக்க அதை பேச முடியாமல் திக்கி திணறி இருக்கிறார் கல்பனா. உடனே அந்த டயலாக் பேப்பரை வெடுக்குனு பிடுங்கி ஊர்வசி படபடன்னு பேசி பாக்கியராஜ்ஜை அசரவைத்து விட்டாராம்.
அப்படித்தான் முந்தானை முடிச்சு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு ஊர்வசிக்கு கிடைத்திருக்கிறது. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஊர்வசி மிக பிரபலமான நடிகையாக பெயர் எடுத்தார்.
குணசித்திர வேடங்களில் ஊர்வசி:
தொடர்ச்சியாக அவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையாக புகழ் பெற்று வந்தார் ஊர்வசி.
அந்த காலத்தில் நட்சத்திர நடிகையாக பல படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக அம்மா கேரக்டர்களில் இவர் நடித்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஜே பேபி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம், வணக்கம் சென்னை, உன் சமையலறையில், இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், கடவுள் இருக்கான் குமாரு , உத்தம வில்லன், ஓ பேபி , சூரரைப் போற்று ,மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
திருமண வாழ்க்கை:
இதனிடையே ஊர்வசி கடந்த 2000 ஆண்டு மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால், இவர்கள் இருவருக்கும் மனம் முறிவு ஏற்பட்டு 2008 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.
அதை எடுத்து சிவப்பிரசாத் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மாவின் நடிப்பை குறித்து பேசி இருக்கும் ஊர்வசியின் மகளான தேஜலக்ஷ்மி… “கண்ண தொறக்கணும் சாமி” அந்த பாடல் எல்லாம் சின்ன வயசுல இருந்து கேட்டிருக்கேன்.
ஆனால், அது அம்மாவோட பாட்டு தான் அப்படின்னு எனக்கு பல வருஷமா தெரியவே தெரியாது. அந்த பிறகு. பல வருடங்கள் கழித்து நான் 8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய நண்பர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள்.
அம்மாவின் கவர்ச்சி பார்த்து ஷாக் ஆகிட்டேன்:
அந்த பாடலில் எல்லாம் உங்க அம்மா பயங்கரமா நடிச்சிருக்காங்க அப்படின்னு சொன்னாங்க…அப்போதான்… என்னது? என்னோட அம்மாவா? அப்படின்னு நான் அதிர்ச்சி ஆகிட்டேன்.
பிறகு தான் நான் அந்த வீடியோ பாடல்களை எடுத்துப் பார்க்கிறேன். அவங்களோட அந்த லுக்கி வேற மாதிரி இருக்கும் . நிஜத்தில் வீட்டில் பார்க்கும் அம்மாவுக்கும் மேக்கப் போட்டுக் கொண்டு படத்தில் நடிக்கும் அம்மாவுக்கும் வித்தியாசம் நிறையவே இருக்கும்.
வீட்ல வேற காஸ்ட்யூம் போட்டுட்டு இருப்பாங்க. படங்களில் நிறைய கவர்ச்சியாக கிளாமராக நடிப்பாங்க அதுக்கப்புறம் தான் எனக்கு அது தெரியவே வந்தது.
பிறகு அம்மாவின் படங்களை எனது தோழிகளுடன் சேர்ந்து நிறைய முறை பார்த்திருக்கிறேன் என ஊர்வசியின் மகள் தேஜலஷ்மி அந்த பேட்டியில் அம்மாவுடன் கலந்து கொண்டு பேசினார். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.