“ரோஜா செடி நல்ல முறையில் வளர வேண்டுமா?” – எளிய டிப்ஸ்..!

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ரோஜா செடியை வைத்திருக்கிறீர்களா? அப்படி அந்த ரோஜா செடியை வைத்து ஆறு மாதம் ஆகியும் அது ஒரு பிட்டு கூடி வளரவில்லை என்ற கவலை உங்களுக்கு உள்ளதா?

 அப்படி இருந்தால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருக்கக்கூடிய சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் போதும் உங்கள் வீட்டு ரோஜாவும் எளிதில் வளர்ந்து நல்ல பூக்களை உங்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ரோஜா செடி எளிதில் வளர டிப்ஸ்

💐உங்கள் வீட்டில் ரோஜா செடியை நட்டு விட்டீர்கள் என்றால் அந்த மண்ணில் நல்ல ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே ரோஜா செடி மிக எளிதாக வளரும். அதுமட்டுமல்லாமல் மண் தளர்வாகவும் ஈரப்பதத்தோடும் உள்ளதா என்பதை நீங்கள் கவனித்து அதற்கு தக்கவாறு இறுக்கமான மண் இருந்தால் நீரினை விட்டு அந்த மண்ணை தளர்வுடன்  மாற்றி  விடுங்கள்.

💐முட்டை ஓடு, டீத்தூளின் எஞ்சிய கழிவுகள் ஆகியவற்றை முக்கிய உரமாக நீங்கள் ரோஜா செடிக்கு கொடுக்கலாம். மேலும் காய்கறி கழிவுகள், பழ கழிவுகளையும் நீங்கள் உரமாக கொடுப்பதன் மூலம் உங்கள் ரோஜா எளிதில் துளித்து வளரும்.

💐பூச்சித்தொல்லை அதிகமாக இருந்தால் வெங்காயத்தோலை தினமும் ஒரு லிட்டர் நீரில் ஊற்றி ஊற வைத்துவிட்டு அந்த நீரை உங்கள் ரோஜா செடிக்கு தெளித்து விடுவதின் மூலம் பூச்சி தொந்தரவு இருந்து விடுதலை கிடைக்கும்.

💐அதுமட்டுமல்லாமல் பூண்டு தோல், வெங்காயத்தோல் இவை இரண்டையும் நன்கு மிக்ஸியில் அடித்து நீரில் கலந்து ரோஜா செடிகளில் தெளித்து வர பூச்சிகள் ஏற்படாது பூக்களில் சொத்தை விழுகாது.

💐எறும்பு தொல்லை, கொசு தொல்லை இருந்தால் வேப்பிலையை பறித்து வேர் பகுதியில் சற்று தள்ளி அதிகம் போட்டு விடுங்கள். இதனால் எறும்பு தொல்லை ஏற்படாது.

தினமும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வேளையில் நீரை ஊற்றி உங்கள் ரோஜா செடியை பக்குவமாக பார்த்து வாருங்கள். கட்டாயம் நல்ல முறையில் வளர்ந்து உங்களுக்கு நிறைய பூக்களை கொடுக்க இந்த மேலே கூறிய டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதுமானது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …