“பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயை சரி செய்ய ஓமம் ஒன்றே போதும்..! ” – அற்புத பலன்களை பெறலாம்..!

பெண்களுக்கு சீர் அற்ற மாதவிடாய் ஏற்பட்டால் பிரச்சனைகள் தான். இது திருமணத்திற்கு பிறகு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பும் ஏற்படும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரித்து விட்டாலே எண்ணற்ற நோய்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பை அது அமைத்துக் கொடுத்துவிடும்.

அப்படிப்பட்ட சீரற்ற மாதவிடாயை சரி செய்வதற்கு எளிய வழியாக ஓமத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ஓமத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யப்பட்டு சீரான மாதவிடாயை நீங்கள் பெற முடியும்.

 அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய சோர்வு, வயிற்று வலி போன்றவற்றை தடுக்கக்கூடிய ஆற்றல் எந்த ஓமத்தில் உள்ள  வேதிப்பொருட்களுக்கு உள்ளது.

 ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்றவை இருப்பதோடு நல்ல ஆக்ஸிஜன் ஏற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற அபரமிதமான வழிகளை தடுக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டது.

மாதவிடாய் தொடங்கிய நாளிலிருந்து இந்த ஓமத்தை டீயை போல் நீங்கள் நீரில் கொதிக்க விட்டு பருகி வருவதன் மூலம் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  ஓமநீரை நீங்கள் குடிப்பதின் மூலம்  சுவாசப் பிரச்சனைகள், சளி, ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்றவை குணமாகும். வயிற்று வலி, வாயுத்தொல்லை போன்றவற்றை குணப்படுத்தக்கூடிய  சக்தி கொண்டுள்ளது.

 இது மட்டுமல்ல ஓமத்தை துணியில் கட்டி மூக்கில் நுகர்ந்தால் மூக்கில் ஒழுகக் கூடிய சளி, நாள்பட்ட சளி மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.

 மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய அஜீரண கோளாறுகளை சரி செய்யக்கூடிய சத்தி இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் அவர்கள் உணவில் சிறிதளவு ஓமத்தையோ, ஓமப்பொடியோ கலந்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.

 வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கு ஓமம் மிகச்சிறந்த மருந்தாக விளங்குகிறது. மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளை குறைப்பதற்கு ஓமத்தை தினமும் ஓம வாட்டர் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

அஜீரண கோளாறுகளை சரி செய்து வயிறு உப்புசம் சீதபேதி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரக்கூடிய இந்த ஓமத்தை உங்கள் உணவில் தினமும் சிறிதளவு சேர்ப்பதின் மூலம் மேற்கூறிய நன்மைகளை அனைவரும் அடையலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …