உலர் திராட்சை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..? – அசர வைக்கும் அற்புதமான உண்மைகள்..!

சர்க்கரை நோயாளிகள் கூட இந்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் எந்தவித பக்க விளைவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?. மேலும் இந்த உலர் திராட்சை உங்களது சர்க்கரையை ரத்தத்தில் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. அப்படிப்பட்ட உலர் திராட்சையை நீங்கள் தினமும் இரவிலோ அல்லது பகல் நேரத்திலோ எடுத்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.

உலர் திராட்சையை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

உலர் திராட்சையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத எண்ணற்ற சத்துக்களான இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்றவை அதிக அளவு உள்ளதால் தினமும்  பத்து முதல் 20 வரை உலர் திராட்சைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது இந்த சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

 மேலும் இதில் இருக்கக்கூடிய அபரிமிதமான பைபர் சத்தானது மலச்சிக்கலை சரி செய்யக்கூடிய தன்மை கொண்டு இருப்பதால் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காலை வெறும் வயிற்றிலும் இரவு உணவு உண்பதற்கு முன்பும் உலர் திராட்சையை சேர்த்துக் கொள்வதின் மூலம் எளிதில் மலம் கழியும்.

கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய உலர் திராட்சையை நீங்கள் அதிகம் உண்ணும் போது உங்கள் ரத்தத்தில் ஏற்படும் இரும்பு சத்து குறைபாட்டை இது தடுக்க உதவி செய்கிறது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து விதமான செயல்களையும் செய்யத் தேவையான காப்பர்சத்தினை இது கொண்டிருப்பதால் நீங்கள் கட்டாயம் கருப்பு நிற உலர் திராட்சையை தினமும் சாப்பிடலாம்.

 உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் இந்த திராட்சைக்கு பெரும் பங்கு உள்ளது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சிறிதலாவது இந்த உலர் திராட்சையை உண்ணும் பழக்கத்தை  ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 தற்போது பல்கி பெருகிவரும் புற்று நோயை எதிர்த்து போராடக்கூடிய சக்தி இந்த உலர் திராட்சைக்கு உள்ளது. இது புற்றுநோய் செல்களை தாக்குவதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் கட்டிகள் வளர காரணமாக இருக்கும் அந்த நோய் கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

மேலும் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கக்கூடிய ஆற்றல்மிக்க உலர் திராட்சை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை நீங்கள் பேணி பாதுகாக்கலாம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version