“முகத்திற்கு நெய் செய்யும் ஜாலம்..!” – நீங்களும் நெய் மசாஜ் செய்து பாருங்க..!

முக அழகுக்காக எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றுவதோடு பல பொருட்களையும் வாங்கி நாம் நம் முகத்தை மென்மேலும் அழகுடன் காட்டிக் கொள்ள விரும்புகிறோம்.

 அந்த வகையில் நெய் நமது முகத்திற்கு பொலிவை தரக்கூடிய பணியை செய்வதோடு மட்டுமல்லாமல் அழகையும் தருகிறது. அப்படிப்பட்ட நெய்யினால் நம் முகத்திற்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நெய் நன்மைகள்

சருமங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவி செய்யக்கூடிய இந்த நெய் உங்கள் முகத்திற்கு தேவையான பொலிவையும் வாரி வழங்குகிறது.

குறிப்பாக இளம் வயதில் ஏற்படுகின்ற வயதான தோற்றத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த நெய்யில் இருக்கும் வைட்டமின் ஏ, இ, டி க்கு அதிக அளவு உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் ஏற்படுகின்ற சுருக்கங்களை எளிதில் மறைய வைக்கிறது.

எனவே நீங்கள் குளிப்பதற்கு முன்பு உங்கள் முகத்தில் நெய்யை லேசாக தடவி நன்கு மசாஜ் செய்து விடுங்கள். இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.

உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், அழுக்கு போன்றவற்றை அடியோடு நீக்குவதோடு மட்டுமல்லாமல் பொலிவாக மாற்றுகிறது. நீங்கள் ஓரிரு நாட்கள் பயன்படுத்தினாலேயே உங்களுக்கு ஏற்படும் மாற்றம் நன்கு தெரியும்.

ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களின் குறைபாடு காரணமாக சருமத்தில் ஏற்படும் வறட்சியை நெய் நீக்குகிறது. அது மட்டுமல்லாமல் வீக்கம், அரிப்பு போன்ற சரும அலர்ஜியிலிருந்து காக்கக்கூடிய மிகப்பெரிய பணியை நெய் அற்புதமாக செய்யும்.

உங்கள் உதடுகளை நெய் கொண்டு மசாஜ் செய்யும் போது கருமை நிறம் மாறி சிவப்பு நிறமாக மாறும். இது தோல் நிறமியை எதிர்த்துப் போராடக்கூடிய ஆற்றல் கொண்டது.

 கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் நீங்கள் எளிதில் சரி செய்ய முடியும். இரவு உறங்குவதற்கு முன்பு கருவளையம் இருக்கும் இடத்தில் நெய்யை சேர்த்து நன்கு நன்கு மசாஜ் செய்து விடுங்கள். பிறகு மறுநாள் காலை உங்கள் முகத்தை எப்போதும் போல் கழுவி விடுங்கள்.இதன் மூலம் உங்கள் கருவளையம் எளிதில் நீங்கும்.

சருமத்தில் இருக்கும் நச்சுக்களை மிக அழகாக வெளியேற்றக்கூடிய தன்மை இதற்கு உண்டு. தோலை இயற்கையான பொலிவுக்கு கொண்டு வரும் ஆற்றல் படைத்த நெய்யை உங்கள் அழகைத் அதிகரிக்க இனி பயன்படுத்தி பாருங்கள்.மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பாலோ செய்தால் கட்டாயம் உங்கள் தரும அழகு அதிகரிக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …