“கொட்டி கிடக்கும் நன்மைகள்..!” – கண்டங்கத்திரி மூலிகை பற்றி தெரிஞ்கோங்க..!!

இயற்கை மூலிகை தாவரமான கண்டங்கத்திரி. இதில் இருக்கும் இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ பயன்களை கொண்டு பலவிதமான நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

இந்த கண்டங்கத்திரியை நீங்கள் உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். அது மட்டுமல்லாமல் நீங்கள் இந்த கண்டங்கத்தரி  சூரணத்தை மருந்தாக  பயன்படுத்தலாம்.

கண்டங்கத்திரி தரும் நன்மைகள்

 கண்டங்கத்திரி செடியில் இருக்கும் பழங்கள் மற்றும் தண்டுகள் அனைத்தும் நுண்ணுயிரிகளை எதிர்க்கக்கூடிய மருத்துவப் பண்பு கொண்டவை. எனவே இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கண்டங்கத்திரி பழத்தை அப்படியே உண்பதால் உங்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி இலை சாறை எடுத்து அதனை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி தடவி வர தலைவலி மற்றும் வாத சம்பந்தமான நோய்களிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

 கடுமையான சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடா இவற்றின் இலைகளை பொடி செய்து சமூலமாக எடுத்துக் கொள்வதின் மூலம் சுவாச பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக இது விளங்கும்.

 உங்கள் பாதங்களில் இருக்கும் பாத வெடிப்புகளை சரி செய்ய வேண்டுமென்றால் கண்டங்கத்திரி இலை சாறுடன் ஆளி விதை எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து இரவில் உறங்கும் போது பூசி வாருங்கள். ஒரே மாதத்தில் உங்கள் பித்த வெடிப்பு அனைத்தும் குணமாகும்.

 சிறுநீரகத் தொற்று ஏதாவது ஏற்பட்டிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருந்தாலும்  கண்டங்கத்திரி இலை சாறை தேனோடு கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பாதையில் ஏற்படுகின்ற எரிச்சல், சூடு போன்றவை சரியாகும்.

 கண்டங்கத்திரி இலை மற்றும் பழத்தை பொடி செய்து தேனோடு குழந்தைகளுக்கு கொடுத்து வர நாள்பட்ட சளி இருமல் அனைத்தும் விரைவாக சரியாகும்.

 பல் சொத்தை காரணமாக உங்களுக்கு பல் வலி ஏற்பட்டால் அந்த பல் இருக்கும் இடத்தில் அதாவது சொத்தை பல் இருக்கும் இடத்தில் கண்டங்கத்திரி பழத்தை சுட்டு அப்படியே வைத்தால் சொத்தைப்பல் இருக்கும் புழு வெளிவந்து வலியை நீக்கி விடும்.

 மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் மருத்துவமனை சென்று அதற்காக நீங்கள் பணத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. கை வைத்தியத்தை கொண்டு சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காண முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …