” மாரியம்மன்-னுக்கு மா விளக்கை போடுங்க..!” நீங்க நினைத்த மாற்றத்தை பாப்பீங்க..!!

 மழையை வேண்டி வழிபடுவதால் மாரியம்மன் என்று பெயர் பெற்ற இந்த அம்மனுக்கு நீங்கள் உங்கள் மனதில் நினைத்த காரியத்தை சாதிப்பதற்காகவும், உடலில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்ய பரிகாரமாக மாவிளக்குயிணை போடுவது தொன்று தொற்று இருந்து வரும் பழக்கமாகும்.

பச்சரிசியை ஊறவைத்து இளம் வெயிலில் உலர்த்தி பாதி ஈரப்பதம் இருக்கும் போதே அதை எடுத்து நன்கு  இடித்து வெல்லத்தை சேர்த்து நீங்கள் பச்சை மாவை தயார் செய்யலாம்.

 இந்த பச்சை மாவில் நீங்கள் திரியினை போட்டு விளக்கினை ஏற்றி மாரியம்மனை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும. நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் உடலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அந்தப் பிரச்சனை இருக்கும் இடத்திலேயே வேப்பிலையை வைத்து அதன் மீது இந்த விளக்கினையும் வைத்து  உங்களுடைய பரிகாரத்தை நீங்கள் நிறைவேற்றலாம்.

 இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக மாறும். மேலும் சிக்கல்கள் என்ன இருந்தாலும் அதை சரி செய்து தரக்கூடிய ஆற்றல் மிக்க அம்மனான மாரியம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பானதாகும்.

 கோடை காலத்தில் ஏற்படும் அம்மை நோயை தணிப்பதற்காக மாரியம்மன் வழிபடுபவர்கள் கோடை துவங்கும் மாசி மாதத்தில் மாரியம்மன் க்கு பூஜைகள் செய்வது வழக்கம்.

 நீங்களும் உங்கள் மனதில் இருக்கும் எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால் மாவிளக்கினை போடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள். கட்டாயம் உங்களுக்கு மாற்றம் ஏற்படும்.

மாரியம்மனுக்கு மா விளக்கொடு நின்று விடாமல் பூ சட்டி எடுத்தல் மற்றும் பூ மிதித்தல் போன்ற வைபங்களும் முறையாக திருவிழா காலங்களில் நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே.

 உங்கள் மனக் குறையை மனம் உருகி மாரியம்மன் முன் வைப்பதோடு இந்த மாவிளக்கையும் நீங்கள் உங்கள் பரிகார பூஜையில் இணைப்பதின் மூலம் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் நினைத்தது நடக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …