பொட்டுக்கடலை : 80, 90களில் படு பேமஸ் ஆக இருந்த ஒரு டைம்பாஸ் தீனி என்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய பணியில் அதிக அளவு முக்கியத்துவம் உள்ள பொட்டுக்கடலை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியுமா? என்று கேட்டால் அது சற்று சந்தேகமான ஒன்றாகத்தான் இருக்கும்.
லேசாக உப்பிட்டு வறுத்து எடுத்து இருக்கக்கூடிய இந்த கடலையின் பொட்டை நீக்க கைகளால் அழுத்தி விட்டு பின் ஊதி ஊதி உண்ண அன்றைய தலைமுறை எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் இந்த கடலையில் நார் சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகளவு இருந்தது தான் அதற்கு காரணம். இந்த கடலையை தின்னும் போது அதிக நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பதால் பசி எடுக்கவே செய்யாது.
மேலும் 100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18 புள்ளி 64 கிராம் அளவு புரதச்சத்து உள்ளது. அது மட்டுமல்லாமல் 16 புள்ளி எட்டு கிராம் நார்ச்சத்து அதிக அளவு காணப்படுவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை எடுத்துக் கொண்டால் விரைவில் உடல் எடை குறையும்.
மலச்சிக்களால் கடுமையான அவதியில் ஆளாகி இருக்கும் இன்றைய தலைமுறையினர் குறிப்பாக அவர் எடுத்துக் கொள்ளும் மாடர்ன் உணவுகளை விடுத்து விட்டு ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலையை உண்ணுவதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் குடல் இயக்கத்தை எளிதாக்குவதின் மூலம் மலம் எளிதில் கழியும்.
இளைஞர்களை இன்று அதிக அளவு தாக்கக்கூடிய இதய நோயை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த பொட்டுக்கடலைக்கு உண்டு. இதில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், காப்பர் போன்ற சத்துக்கள் அதிக அளவு இருப்பதால் இதய நோயின் ஆபத்தை குறைக்க உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை வலுமைப்படுத்தும்.
அது மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்து சர்க்கரை செயலிழப்பிலிருந்து உங்களை பாதுகாக்க உதவக்கூடிய இந்த பொட்டுக்கடலையை நிறைய உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ், காப்பர் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இது எலும்புகளில் ஏற்படும் பலவீனம் மூட்டு வலிகளை தடுக்க இந்த வறுத்த பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி அளவு தினமும் நீங்கள் ஏதாவது ஒரு வேளையில் எடுத்துக் கொண்டாலே போதுமானது.