” தர்பூஸ் சீசன் ஆரம்பிச்சாச்சு..!” – மறக்காம வாங்கி சாப்பிட இத்தனை நன்ம உங்களுக்குத்தான்..!!

 கோடை காலம் தொடங்கி விட்டாலே அங்கங்கு தர்பூஸ் @ தர்பூசணி கூடாரங்களை பார்க்கலாம்.உடலில் நீரின் சமநிலை மாறுபடும் போது நா வறட்சியை நீக்க தர்பூசணியை அனைவரும் வாங்கி சாப்பிடுவார்கள்.

 அப்படிப்பட்ட நீர் சத்து அதிகம் உள்ள இந்த தர்பூசணியை சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. 100 கிராம் தர்பூசணி பழத்தில் சுமார் 6.2 கிராம் அளவு மட்டுமே சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய வைட்டமின் சி சத்து இதில் அதிக அளவு உள்ளது. அதுமட்டுமல்லாமல் காயங்களால் ஏற்படும் பாதிப்புகளை மிக எளிதில் குணமாக்கக்கூடிய கொலாஜனை உற்பத்தி செய்ய இது உதவி செய்கிறது.

 அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தையும் கூந்தலையும் கண்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது.

 நீர்ச்சத்தோடு நார் சத்தும் உள்ள பழம் என்பதால் நீங்கள் காலை நேரத்தில் இதை ஒரு சிற்றுணவாக எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் உடல் எடையை மிக எளிதில் குறைக்க முடியும். தர்பூசணியில் இருக்கக்கூடிய லைகோபின் என்ற வேதிப்பொருளானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவி செய்வதோடு தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டிக் கொள் வைத்துக்கொள்ள உதவுவதாக பல ஆய்வுகள் கூறியிருக்கிறது.

 இந்த தர்பூசணியில் அமினோ அமிலங்களான சிட்ருலின்  நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி செய்ய உதவி செய்கிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதை தடுக்கக்கூடிய ஒரு அற்புதமான சக்தி படைத்தது.

 தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதால் பல்லில் இருக்கும் ஈறுகள் வலுவாகிறது. ஈறுகளில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை கொல்லக்கூடிய ஆற்றல் இந்த தர்பூசணியில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்களுக்கு உள்ளது. மேலும் இது பற்களை வெண்மையாகவும் உதடுகளை நா வரட்சியில் இருந்து காக்கவும் இது உதவி செய்கிறது.

எனவே சீசனல் பழமான இந்த தர்பூசணியை கோடை சீசனில் நீங்கள் வாங்கி உண்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும் என்பதை புரிந்து கொண்டு வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ அவசியம் தர்ப்பூசணியை சாப்பிடுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …