குஷ்பூ : தமிழ் பேசத் தெரியாத நிலையில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆன சிறந்த நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா? இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பல ரசிகர்களை கொண்டவர்.
தற்போது வரை திரையுலகில் அசைக்க முடியாத நடிகைகளின் பட்டியலில் இவரும் ஒருவர் ஏறக்குறைய ராதிகா, நதியா, ரேவதி போன்றவர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.
வடநாட்டுப் பெண் என்றாலும் தமிழகத்தின் மருமகள் தரமான படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் சிறந்த பெயரைப் பெற்றவர்.
திரைத்துறையில் நடிப்பதோடு நின்றுவிடாமல் தயாரிப்பாளர் ,இயக்குனர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.
படு பிசியான இவர் சின்னத்திரைகளிலும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு தனக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியை தெறிக்க விடுவார். இதனால் இவர்களின் ரசிகர்கள் அவருக்காக எப்போதுமே காத்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இவருடைய நிகழ்ச்சி தொகுப்பு சிறப்பாக இருக்கும்.
இவர் வேறு யாருமில்லை கொண்டையில் தாழம்பூ கூடையில் என்ன பூ என்று சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து கலக்குக் கலக்கிய குஷ்புதான்.
சின்னத்தம்பி படத்தின் மூலம் மக்களின் இதயங்களில் ராணியாக அமர்ந்து கொண்ட இவருக்கு இவரது ரசிகர்கள் திருச்சியில் கோயில் கட்டி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தினார்கள். இதுவரை எந்த நடிகர் நடிகைக்கும் இல்லாத புகழை அவர்கள் இவருக்கு சேர்த்து தந்தார்கள்.
தமிழ் இயக்குனர்களின் வரிசையில் மிகச் சிறந்தவராக இருக்கக்கூடிய சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பெண்களுக்கு தாயாக இருக்கிறார். நடிகை குஷ்பூ இவரின் இயற்பெயர் நக்கத் கான்.
திரைப்படம் நடிப்பு என்பதோடு நின்றுவிடாமல் இவரும் அரசியலில் குதித்து அரசியலில் ஈடுபட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவ்வப்போது தன் கருத்துக்களை மிகவும் நேர்த்தியான முறையில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி விடுவதிலும் இவர் வல்லவர்.
தற்போது குஷ்பூ லண்டனில் தன் மகள் படிப்புக்காக அவருடன் தங்கியிருக்கக் கூடிய வேளையில் அங்கே எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் உடல் இழைத்த நிலையில் தற்போது பழைய குஷ்பு போல மாறிவிட்டார் என்று கேட்கும் அளவுக்கு இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.
இந்நிலையில், தன்னுடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து என்னுடைய கண் புருவத்தை பார்க்க தவறி விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.