” V கட் மற்றும் U கட் உங்க வீட்டில் நீங்களே செய்யலாம்..!” – எப்படி பார்க்கலாமா?

இன்றைய தலைமுறை முடி வளர்ச்சியில் மட்டுமல்ல முடிகளை விதவிதமாக பேன்சியாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதிலும் விதவிதமான ஸ்டைலில் முடிகளை வெட்டி  அவர்களின் அழகை மேலும் அழகாக காட்ட   பியூட்டி பார்லர்களை நோக்கி படையெடுக்குகிறார்கள்.

 அந்த வகையில் இன்று உங்கள் வீடுகளிலேயே நீங்கள் இருந்து கொண்டு V கட் மட்டும் U கட் எப்படி செய்யலாம் என்பதையும் பைசா செலவில்லாமல் நீங்கள் செய்வதற்கான வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த கட்டிங்கை செய்வதற்கு ஐந்து நிமிடம் கூட பிடிக்காத சமயத்தில் எவ்வளவு ரூபாய்களை நீங்கள் அழுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வி கட் மற்றும் யூ கட் செய்ய செய்முறை

 முதலில் நீங்கள் ஹேர் கட் செய்வதற்கு முன்பு உங்கள் தலையை நன்கு குளித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் முடியை நன்கு உலர விடுங்கள். சிக்கு ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 குறிப்பாக ஹேர் கட் செய்வதற்கு முன்பு நீங்கள் முடிக்கு எண்ணெய் ஏதும் அப்ளை செய்ய வேண்டா.ம் அப்படி செய்தால் நிச்சயமாக சரியாக ஹேர் கட் வராது.

 இப்போது உங்கள் முடிவில் சிக்குகள் இல்லாமல் பார்த்து பின்னர் உங்கள் தலை முடியை ஒன்றாக வாரி மண்டையை ஒட்டியது போல ஒரு ரப்பர் பேண்டை இறுக்கமாக போட்டுக் கொள்ளுங்கள்.

 அதுபோல எல்லா முடியையும் ஒன்றாக முன் பகுதிக்கு கொண்டு வந்து தலைமுடியின் உச்சியில் பகுதியையும் ரப்பர் பேண்ட் போட்டு தொங்க விடுங்கள். அவ்வாறு தொங்க விட்ட பிறகு உங்கள் முடியை நன்கு வாரிக் கொள்ள வேண்டும்.

 இதனை அடுத்து உங்களுக்கு எப்படி வெட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஷார்ப்பான கத்திரி கோலை கொண்டு முதலில் நேராக வெட்டுங்கள். நேராக வெட்டி முடித்ததும் கூந்தலை பின்புறம் போட்டு ரப்பர் பேண்டை எடுத்து விடுங்கள். இப்போது சீப்பைக் கொண்டு நன்கு வாரி விடுங்கள்.

 அப்படி நீங்கள் வாரி விட்டீர்கள் என்றால் உங்களுடைய வீ ஷேப் கட்டிங் இப்போது மிக அழகாக தெரியும். இதுவே யூ கட்டிங் செய்ய தலைமுடியை காயவைத்து நேராக முன் இருந்து பின்புறம் வரை வகுந்தெடுத்து இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும். வீட்டை இந்த முடிகளை இரண்டு பக்கமும் ஒன்று போல் எடுத்து வந்து வாரி விடுங்கள்.

 பின்னர் இந்த இரண்டு முடியையும் சேர்த்து கழுத்துக்கு ரப்பர் பேண்டை இறுக்கமாக போட்டு விடுங்கள். மேலும் அடிப்புறம் வாரிவிட்டு கீழ்புறமும் ஒரு ரப்பர் பேண்டை போட்டு நீங்கள்  எளிதாக கட் பண்ணி விடலாம்.

 இப்போது நீங்க வெட்டி எடுக்கும் முடியை பின்னாடி போட்டு பாருங்கள் அழகாக யூ ஷேப் வந்திருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தி வீ மற்றும் யூசேப்பில் அழகான முடிகளை நீங்களே 10 பைசா செலவில்லாமல் செய்துவிடலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …