வாத்தி – படம் எப்படி இருக்கு..? – திரைவிமர்சனம்..!

நடிகர் தனுஷ் நடிகை சம்யுக்தா மேனன் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர்கள் சமுத்திரகனி மற்றும் கென் கருணாஸ் மொட்டை ராஜேந்திரன் போன்ற பிரபலமான நடிகர்களின் கூட்டணியில் இன்று வெளியாகி இருக்கிறது வாத்தி திரைப்படம்.

என்ன கதை..?

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கடந்த 1990களில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தது.

மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார நோக்கத்தை அதனுடைய எதிர்கால லாபத்தை தெரிந்து கொண்ட பண முதலைகள் தனியார் பள்ளிகள் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் போன்றவற்றை தொடங்கி நன்கு தேர்ந்த அரசியல் அரசு பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அதன் மூலம் அரசு பள்ளிகள் மாணவர்கள் படிக்க உகந்ததல்ல என்ற ஒரு சூழலை உருவாக்கி அரசு பள்ளிகளை மூடுவதற்கு ஏற்பாடுகளை செய்கின்றனர்.

மறுபக்கம் மூடப்பட்ட அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் போராட்டம் வெடிக்கிறது. இதனால் கட்டண ஒழுங்கு முறையை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது அரசாங்கம்.

இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரகனி அரசு பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார்.

மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளியிலிருந்து ஆசிரியர்களை அனுப்பி கல்வியும் கொடுப்பேன் என்று கூறுகிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட ஒரு வாத்தியாராக நடிகர் தனுஷ் இருக்கிறார்.

நடிகர் தனுஷ் சென்ற ஊரில் உள்ள பள்ளியில் இருக்கும் பிரச்சினைகள் என்ன..? அந்த மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைத்ததா..? சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா..? என்பதை வளவளவென இழுத்துக் கொண்டு போய் சொல்லி இருக்கின்றனர்.

என்ன பண்ணி வச்சிருக்காங்க..?

படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் தனுஷ் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக தன்னுடைய தோளில் சுமந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளில் நடக்கக்கூடிய அட்டூழியங்களை இந்த படம் காட்டப் போகிறது என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

அப்படி எந்த ஒரு அழுத்தமான காட்சியும் இல்லாமல் படத்தின் கதை நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல காட்சிகள் செயற்கை தனமாக நம்புவதற்கு கடினமாக இருக்கின்றன.

மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்யுக்தா மேனனுக்கு சொல்லிக் கொள்ளும்படி கதாபாத்திரம் இல்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டும் தலை காட்டுகிறார் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா.

எதை கவனித்திருக்கலாம்…?

மேலும் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இந்த படத்தில் என்னவாக வருகிறார் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை. படம் முழுக்க தெலுங்கு சினிமா வாடை வீசுவதால் படத்தில் ஒன்றை பயணிக்க முடியாமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள்.

மேலும் படிப்பு என்பது மரியாதையை சம்பாதித்து கொடுக்கும். படிப்பு என்பது பிரசாதம் மாதிரி அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். அதை நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் உணவு போல விற்பனை செய்யாதீர்கள்.

கல்வியில் கிடைக்கும் காசு அரசியலில் கிடைக்காது என அங்கங்கே வரக்கூடிய வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கின்றன. சுத்தமாக தமிழ் மொழியில் வெளியாகி இருக்கக்கூடிய ஒரு தெலுங்கு திரைப்படம் என்று இந்த வாத்தி திரைப்படத்தை கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version