“அடிக்கிற வெயிலுக்கு பொரி வடாம்..!” – இப்படி போடுங்க..!

பொரி வடாம்:சுளீர் என்று அடிக்கும் வெயில் சமயத்தை நீங்கள் வடாம் போட பயன்படுத்திக் கொண்டால் மழைக்காலத்தில் இந்த வடகத்தை பொறித்து சுவையாக சுவைத்து சாப்பிடலாம்.

Pori Vadam

ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம், கூழ் வடாம் என பல வகைகள் இருந்தாலும் அவற்றை போடுகின்ற பணி மிகவும் சிரமமானது. அதை செய்து பார்க்கும் போது தான் அதன் வலி தெரியும். ஆனால் இந்த பொரி வடாம் போடுவது மிகவும் சுலபமானது

பொதுவாகவே வடாம் போடுவதற்கு ஒருவர் மட்டும் போதாது. இரண்டு, மூன்று பேர் இருந்தால் தான் எளிதாக செய்ய முடியும்.எனவே சுலபமான முறையில் நீங்கள் இந்த பொரி வடாம் செய்வது எளிதானது. அந்த பொரி வடாம் செய்வது எப்படி என்பதை பற்றி விவரமாக இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பொரி வடாம் தேவையான பொருட்கள்

Pori Vadam

1.பொரி அரை லிட்டர்

2.பச்சை மிளகாய் விழுது 2 டீஸ்பூன்

3.புளித்த தயிர் 2 டீஸ்பூன்

4.உப்பு தேவையான அளவு

5.சீரகம் அரை டேபிள் ஸ்பூன்

6.எள் அரை டீஸ்பூன்

Pori Vadam

செய்முறை

முதலில் பொரியை தண்ணீரில் அலசி கழுவி பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் பாதி பொரியை மட்டும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியில் அரைத்த பொரி மற்றும் பிழிந்து வைத்துள்ள பொரி இவற்றை ஒன்றாக கலந்து விட்டு, இதனோடு பச்சை மிளகாய் விழுது, உப்பு தயிர், சீரகம், எள் இவற்றையெல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து விடுங்கள்.

Pori Vadam

பின்னர் பிசைந்த இந்த கலவையை நீங்கள் சிறு சிறு வட்டமாக லேசாக தட்டி வெயிலில் உலர்த்தி வைக்கவும். நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை எந்த வராத்தை வெயிலில் உலர்த்தி பிறகு எடுத்து விடுங்கள்.

இந்த வடகத்தை நீங்கள் எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு பாருங்கள் உங்கள் நாவை அசத்தக்கூடிய வகையில் சுவை இருக்கும்.

Pori Vadam

மிக சுலபமான இந்த பொரி வடாதை உங்கள் வீட்டில் நீங்கள் செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து அசத்திப்பாருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …