மார்க்கெட் அவுட் ஆன பிறகு அரசியலுக்கு வந்த நடிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அரசியலுக்கு வந்ததால் மார்க்கெட் அவுட் ஆன ஒரு நடிகர் என்றால் அது நடிகர் வடிவேலு ஒருவர் தான் என்று கூறலாம்.
விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையை அரசியல் பிரச்சினையாக்கி அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வாங்கி கட்டிக் கொண்டவர் வடிவேலு.
விஜயகாந்த் செய்த புண்ணியமா..? அல்லது வடிவேலு செய்த பாவமா..? என்னவென்று தெரியவில்லை. அந்த தேர்தலில் நடிகர் வடிவேலு எந்த கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தாரோ.. அந்தக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
வடிவேலு
எந்த கட்சிக்கு ஆதரவாக பேசினாரோ..? அந்த கட்சி வரலாறு காண தோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்தது. இப்படி இடியாப்ப சிக்கலில் சிக்கி தவித்தார் வடிவேலு. வருடத்திற்கு 20 முதல் 25 படங்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்த மனிதன். திடீரென கூண்டுக்கிளியாக மாறிப்போனார்.
அவ்வப்போது சொந்த பணத்தை போட்டு இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என கொடுத்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் பலரும் மீம்களில் இவருடைய முகத்தை பயன்படுத்தி இவரை லைம் லைட்டிலேயே வைத்திருந்தனர்.
அவ்வப்போது அரசியல் குறித்த கேள்விகளுக்கு நாசுக்காக பதில் அளித்து வந்த வடிவேலு தற்பொழுது நடிகர் விஜயின் அரசியல் நுழைவு குறித்து தன்னுடைய பதிலை கூறியிருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய தாயாரின் இறப்பை தொடர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மோட்ச தீபம் ஏற்றுவதற்காக திருக்கோயில் ஒன்றுக்கு வந்திருந்தார்.
அரசியல் கேள்வி
நடிகர் வடிவேலு திரும்பும் வழியில் பத்திரிக்கையாளர்கள் சிலர் பல்வேறு கேள்விகளை வடிவேலுவிடம் எழுப்பினர்கள். இறுதியாக, ஒரே ஒரு கேள்வி அவ்வளவுதான் போதும் என்று கூறினார் பத்திரிக்கையாளர் ஒருவர்.
என்ன கேள்வி என்று கேட்டார் வடிவேலு.. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் இது பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்று கேள்வி எழுப்பினார் பத்திரிகையாளர்.
இதற்கு பதிலளித்த வடிவேலு, அதான் சொல்லிட்டீங்களே.. அவ்வளவுதான்.. போதும். என்று பத்திரிக்கையாளர் கூறிய விஷயத்தை திருப்பி பதிலாக சொல்லி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
ஏற்கனவே ஒரு நடிகரின் அரசியலை விமர்சனம் செய்து தான் ப்யூஸ் போன பல்பாக நம்மை மாற்றி விட்டார்கள். தற்பொழுது மீண்டும் அரசியலா…? என்று பீதியாகி போன வடிவேலு அங்கிருந்து எந்த பதிலும் சொல்லாமல் அவ்வளவுதான் போதும் விடுங்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய ஆரம்பத்திலேயே நடிகர் வடிவேலு அந்த சப்ஜெக்ட்க்குள் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டார். இதுதான் இவருக்கு நல்லது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.