“அந்த நடிகை தான் வேண்டும்ன்னு வச்சு செய்த வடிவேலு..” ஆளே காணமால் போன நடிகை..

மதுரையைச் சேர்ந்த நடிகர் வடிவேலு 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு தமிழ் திரை உலகில் காலியாக இருந்த காமெடியன் இடத்தை நிரப்பிய அசாத்தியமான நகைச்சுவை திறன் படைத்த நடிகர் வடிவேலுவை ரசிகர்கள் அனைவரும் பாசத்தோடு வைகைப்புயல் என்று அழைக்கிறார்கள்.

நடிகர் வடிவேலு..

ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய நடிகர் வடிவேலு திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணத்தால் சென்னைக்கு வந்தவர். இவர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்த என் ராசாவின் மனதிலே என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவையாக நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார்.

இதனை அடுத்து போடா போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடிய இவர் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் திகழ்கிறார். இந்தப் படத்தை அடுத்து இவர் 1992 இல் சின்ன கவுண்டர் படத்தில் நடித்த கேப்டன் விஜயகாந்த் குடை பிடிக்கின்ற கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து பெருமளவு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

தனக்கு கிடைத்த சரியான வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட நடிகை வடிவேலு உச்சகட்ட காமெடியன்களில் ஒருவராக மாறியதோடு மட்டுமல்லாமல் வடிவேலு இல்லாத படமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு பிசியாக நடிக்க ஆரம்பித்து செல்வத்தை சேர்க்க ஆரம்பித்து விட்டார்.

இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்து வெளிவந்த வரவு எட்டணா செலவு பத்தணா, இளவரசன், சிங்காரவேலன், தேவர் மகன், காத்திருக்க நேரமில்லை, கிழக்குச் சீமையிலே, வாட்ச்மேன், பொங்கலோ பொங்கல், காலம் மாறிப்போச்சு, முத்து, ஆணழகன், காதல் தேசம், சுந்தர புருஷன், மிஸ்டர் ரோமியோ, கங்கா கௌரி, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, விரலுக்கேத்த வீக்கம், முதல்வன், கந்தா கடம்பா கதிர்வேலா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

மேலும் 2000 ஆவது ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளி வந்த வெற்றி கொடி கட்டு படத்தில் பார்த்திபனுடன் இணைந்து செய்த காமெடி காட்சிகள் ரசிகர்களின் கர ஓசையை பெற்றதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலுவின் காமெடிகளை ரசிக்க ஆரம்பித்தார்கள்.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த வின்னர் திரைப்படம் இவர் வாழ்க்கையை புரட்டி போட்டது. இந்த திரைப்படத்தில் இவர் செய்த கேரக்டர் பலர் மத்தியிலும் பிரபலம் ஆனது. அத்தோடு கைப்புள்ள கதாபாத்திரம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற அனைவரையும் சிரிக்க வைத்தது.

வடிவேலுவால் மார்க்கெட் காலியான நடிகை..

இப்படி காமெடியில் கலக்கி வந்த நடிகர் வடிவேலு பெண்கள் விஷயத்தில் படு வீக்கான பேர்வழி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இவர் உச்சகட்ட ஹீரோயினியாக திகழ்ந்த ஸ்ரேயாவை தன் உடன் நடிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தால் நடிக்க வைத்து அவரது மார்க்கெட்டை காலி செய்த விஷயம் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

நடிகர் வடிவேலு இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது எப்படியாவது ஒரு பாடலுக்காவது நடிகை ஸ்ரேயாவை கட்டிப்பிடித்து ஆட வேண்டும் என்று நினைத்து அந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா தான் வேண்டும் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிகை ஸ்ரேயா வடிவேலுவை கட்டிப்பிடித்து ஆட்டம் போட பல லட்சங்கள் கொட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வரக்கூடிய வாய்ப்புகள் அப்படியே குறைந்து போனது.

இதற்குக் காரணம் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகையுடன் நாங்கள் நடிப்பதாக என பல்வேறு முன்னணி ஹீரோக்கள் ஸ்ரேயாவை புறக்கணித்த காரணத்தால் நடிகை ஸ்ரேயா இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற திரைப்படத்திற்கு பிறகு மார்க்கெட் இழந்து காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …