தளபதி விஜய் படத்தை இயக்கிய வடிவேலு ! வைரலாகும் செய்தி

கவுண்டமணி செந்தில் க்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியின் உச்சம் தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்ற வைகைப்புயல் வடிவேலு ஒரு கட்டத்திற்குப் பிறகு பல அரசியல் காரணங்களால் 10 வருடத்திற்கும் மேலாக திரையுலகில் படவாய்ப்புகள் இன்றி இருந்தார்.

இவரை தூக்கிவிட்டு விஜய்காந்தையே இவர் தரக்குறைவாக பேசியிருந்தார். என்னதான் காமெடியில் புலியாக இருந்தாலும் தனது பேச்சில் சரியாக இல்லை.

மேலும் இவருடன் நடித்த சக நகைச்சுவை நடிகர்கள் பலர் வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகர்களை வளர விட மாட்டார் என்றும், கடுமையாக நடந்து கொள்வார் என்றும் குற்றம் சாட்டினார்கள். பல பேட்டிகளில் இவருடன் நடித்த நடிகர் பலர் இவரை இந்த மாதிரி கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கிங்காங், நான் படம் நடிக்கும் பொழுது எப்படி நடித்தால் நல்லா இருக்கும் எப்படி பேசினால் நல்லா இருக்கும் ரசிகர்கள் எதை விரும்பு வார்கள் என்று எனக்கு டிப்ஸ் கொடுப்பார். முக்கியமாக போக்கிரி படத்தில் நான் நடித்த காமெடி காட்சிகள் இப்பொழுதும் மக்களால் பேசப்படுகிறது.

இதில் வடிவேலுவின் பங்கும் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். விஜய் நடித்த போக்கிரி படத்தில் வடிவேலுடன் சேர்ந்து கிங்காங் செய்யும் காமெடிகள் மக்கள் மனதில் இன்றளவும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

அதிலும் குறிப்பாக லாரி ஓட்டும் டிரைவராக வரும் கிங்காங் தண்ணீரை வீணடித்து செல்வதைப் பார்த்த வடிவேலு செய்யும் அலப்பறை இன்றும் பார்த்தால் காமெடியாக தான் இருக்கும்.

இந்த சூப்பர் ஹிட் காமெடி சீனை இயக்கியதே வடிவேலுதான் என்றும் பிரபுதேவாவிடம் பேசி அந்த மொத்த காட்சியையும் வடிவேலு இயக்கியதாக கிங்காங் கூறியுள்ளார்.

மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் வடிவேலுக்கு இப்படி ஒரு திறமையா என்று புகழ்ந்து வருகிறார்கள் மேலும் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …