எல்லோரும் எதிர்பார்த்தது போலவே விஜயகாந்தின் மறைவு செய்தியை அறிந்து இரங்கல் கூட தெரிவிக்காத வடிவேலு மனிதனா? என்று கேட்க தோன்றக்கூடிய வகையில் நன்றி கெட்ட மனிதனாக நடந்து கொண்டது பரவலாக இணையங்களில் கழுவி ஊற்றப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே மறைந்த நடிகர் விஜயகாந்த் வடிவேலுக்கும் இடையே சண்டை இருந்ததை யாரும் மறக்க முடியாது. இருவருக்கும் இடையே ஆன இந்த சண்டையால் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களுக்குள் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டது.
இது குறித்து விஜயகாந்த் நெருங்கிய நண்பரான தியாகு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் விஜயகாந்தின் வக்கீல் ஒருவர் இறந்து விட்டார். அந்த சமயத்தில் வடிவேலுவின் வீட்டின் எதிரே விஜயகாந்தின் வக்கீல் வீடு இருந்ததால் துக்கம் விசாரிக்க சென்ற சிலர் வடிவேலுவின் வீட்டின் முன் வண்டிகளை பார்க் செய்து இருக்கிறார்கள்.
இந்த சாதாரண விஷயத்தை பொறுத்துக் கொள்ளாத வடிவேலு என் வீட்டு பக்கம் ஏன் வண்டியை நிறுத்துகிறீங்க. எல்லா வண்டியையும் உடனே எடுங்க.. என்று கேவலமாக சத்தம் போட்டு இருக்கிறார். சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பி விடுவார்கள் அது வரைக்கும் பொறுத்துக் கொள்ளக் கூடாதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு ஒரு மிகப்பெரிய கலவரம் வெடிக்க விஜயகாந்த் ஆட்கள் என்னிடம் வம்பு இழுப்பதாக பொய் புகாரை கலைஞரிடம் கொடுத்தார். விஜயகாந்த் பழி வாங்க தக்க சமயம் பார்த்து காத்திருந்த திமுக வடிவேலுவை பிரச்சாரம் செய்வதற்கு இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதனால் தான் இவர் விஜயகாந்தின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற நிலையில், தற்போது வடிவேலுவின் நண்பரும் விசிக நிர்வாகியுமான மாலின் அண்மை பேட்டியில் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் சென்றால் அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயத்தால் வடிவேலு நேரில் செல்லவில்லை.
ஆனால் அண்ணன் விஜயகாந்தை மறக்க முடியாமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத குற்ற உணர்ச்சியால் தொடர்ச்சியாக மது அருந்தி புலம்பி வருவதாக தெரிவித்து இருப்பது சினிமா வட்டாரங்களில் முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது.