கெஞ்சி கேட்ட குஷ்பு.. தலைகணத்தில் வடிவேலு செய்த செயல்!.. இதுதான் சண்டைக்கு காரணம்!.

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தொடர்ந்து சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

தன்னுடைய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தையே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சிக்கு அதிக வெற்றியை கொடுத்தது காமெடி திரைப்படங்கள்தான்.

சுந்தர்சிக்கு வந்த வாய்ப்பு:

அன்பே சிவம், அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட சுந்தர்சிக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பதே இந்த நகைச்சுவை திரைப்படங்கள்தான். எவ்வளவோ முக்கிய காமெடி நடிகர்களை அவரது திரைப்படங்களில் நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர் சி.

உதாரணத்திற்கு அப்போதைய நடிகர்களான கவுண்டமணி விவேக்கில் தொடங்கி இப்பொழுது இருக்கும் சந்தானம், சூரி வரை பலரையும் அவரது திரைப்படத்தில் பார்க்க முடியும். ஆனால் வடிவேலு மட்டும் சுந்தர் சியின் திரைப்படங்களில் சமீப காலமாக நடித்திருப்பதை பார்க்க முடிவதில்லை.

இதற்கு இடையே அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சண்டைதான் காரணம் என்று குஷ்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சுந்தர் சி இயக்கும் ஒரு திரைப்படத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரமாக நடிக்க இருந்தது. ஆனால் சுந்தர் சி வடிவேலுவிடம் கேட்காமலேயே அந்த கதாபாத்திரத்திற்கு சந்தானத்தை நடிக்க வைத்தார்.

வடிவேலுவுடன் பிரச்சனை:

இதனால் வடிவேலு மிகவும் கோபப்பட்டு சுந்தர்சியிடம் சண்டை போட்டார் இதனால் சுந்தர் சிக்கும் வடிவேலுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு முன்பு கூட தலைநகரம், நகரம் மாதிரியான திரைப்படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.

ஆனாலும் இந்த பிரச்சனையால் அதற்குப் பிறகு சுந்தர்சியுடன் நடிப்பதை அறவே தவிர்த்து வந்துள்ளார் வடிவேலு. இதை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்குப் பிறகு நடிகை குஷ்பூ வடிவேலுவிடம் சென்று சமாதானம் பேசியும் கூட வடிவேலு காம்பரமைஸ் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்சமயம் காலங்கள் ஓடிய பிறகு அதையெல்லாம் மறந்து சுந்தர்சியுடன் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் வடிவேலு அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அரண்மனை 5 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர் சி.

அந்த திரைப்படத்தில்தான் வடிவேலு அவருடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அரண்மனை 4க்கு பிறகு சுந்தர் சி இயக்கவிருக்கும் கலகலப்பு 3 திரைப்படத்தில் சுந்தர் சி நடிப்பதாக இல்லை எனவே அரண்மனை 5 திரைப்படத்தில் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பேச்சுக்கள் இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam