மூட்டையில என்ன இருக்குன்னு கேப்டன் இப்படித்தான் செக் பண்ணுவாரு.. வாகை சந்திரசேகர் கண்ணீர்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக மிகச்சிறந்த மனிதராக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும்,

தன்னுடன் நடித்த சக கலைஞர்களாலும் மிகச்சிறந்த மனிதராக புகழ் பாராட்டப்பட்டவர் தான் நடிகர் விஜயகாந்த்.

இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவரால் தயாரிப்பாளர்,

இயக்குனர்களுக்கு லாபம் என்ற வகையில் இவரது படத்தை எடுத்தாலே அவர்களுக்கு அவர்கள் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள் என்ற ஒரு அந்தஸ்தில் இருந்தவர் விஜயகாந்த்.

நடிகர் விஜயகாந்த்:

மிகச்சிறந்த மனிதர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். இவருக்கு திரை பின்னணி கொண்ட குடும்பம் ஏதுமில்லை.

ஆனாலும் திரைத்துறையில் தனது திறமையால் வளர்ந்து ஜொலித்து காட்டினார். பார்ப்பதற்கு கருப்பு நிறம் கொண்டு ஹீரோ போன்ற லுக் எதுவுமே இல்லாமல் இருந்திருந்தாலும் கூட ,

அவரை மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். கருப்பு ராசா என ரசிகர்கள் அவரை புகழ் பாராட்ட தொடங்கினார்கள்.

குறிப்பாக மிகவும் மனிதாபிமானம் மிக்க பெருந்தன்மையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து,

நடித்து சிறந்த மனிதராக நிஜத்திலே இப்படித்தான் என மக்களின் மனதில் நடிப்பின் மூலமாகவே பதிய வைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.

கட்டு மஸ்தான உடல் தோற்றத்துடன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் வில்லன்களை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்குவார்.

பலசாலியாக கேப்டன்:

அப்படி ஒரு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு இருந்த அவர் வயதான காலத்தில் உடல் நெளிந்து,

மிகவும் மோசம் அடைந்து பார்க்கவே முடியாத அளவுக்கு அவர் உடல் மெலிந்து மரணமடைந்ததை,

மக்கள் பலரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது மரணச் செய்தி பலரால் நம்ப முடியவில்லை. அந்த வகையில் அவருடன் நடித்த பல நடிகர் நடிகைகள் விஜயகாந்தின் மரணத்தை குறித்தும்,

அவர் எப்படிப்பட்டவர், எவ்வளவு உதவிகள் செய்துள்ளார் எனபதை குறித்தும் தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள்.

அந்த வகையில் தற்போது திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், அரசியல்வாதியும் ஆன வாகை சந்திரசேகர்,

விஜயகாந்த் பற்றியும் அவரது பலசாலியான உடம்பைப் பற்றியும் அவரது நடிப்பை பற்றியும் பிரமித்து போய் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது.

வாகை சந்திரசேகர் கண்ணீர்:

நடிகர் வாகை சந்திரசேகர் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் குறித்த அனுபவத்தை தன்னுடைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் அவர் கூறியதாவது,

பொதுவாக ரைஸ்மில் உள்ளே என்ன நெல்லு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக கொக்கி போன்ற ஒரு ஆயுதத்தை வைத்து இருப்பார்கள்.

அதை மூட்டையில் குத்தி வெளியே எடுத்தால் அதில் நெல்மணிகள் வரும் இது அனைத்து ரைஸ் மில்கள் மற்றும் கடைகளில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் கேப்டன் விஜயகாந்த் எப்படி அதனை பரிசோதிப்பார் என்றால் தன்னுடைய ஆட்காட்டி விரலை டக்கென மூட்டைக்குள் நுழைத்து நெல்மணிகளை எடுத்து பார்ப்பார்.

அந்த அளவுக்கு ஒரு பலசாலி அந்த அளவுக்கு ஒரு பராத்தரமா சாலியானவர் படத்தில் மட்டும் தான் அவர் பத்து பேரை அடிக்கிறார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஒற்றை விரலில் முழு பலத்தை கட்டிய விஜயகாந்த்:

நிஜத்தில் ஆயிரம் பேர் வந்தாலும் சமாளிக்க கூடிய ஒரு வலுவான ஒரு நபர் விஜயகாந்த். ஆனால். அவர் ஒரு கட்டத்தில் உடல்நிலை முடியாமல் உடல் மெலிந்து ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதை,

என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை அதனால் தான் அவரை நேரில் பார்க்க நான் விரும்பவில்லை என்னால் தாங்க முடியாது.

நான் ஒரு காலத்தில் அவரை எப்படி பார்த்து வளர்ந்தவன் அவருடைய பலம் என்ன எனக்கு தெரியும் அவருடைய உடல் ஒரு இரும்பு போல ஒரு பலமானவர்.

அப்படி ஒரு மனிதரை இப்படி பார்க்க வேண்டுமா என்று எனக்குள் நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன் கண்டிப்பாக என்னால்,

விஜயகாந்தை ஒரு மோசமான நிலைமையில் நேருக்கு நேர் பார்த்தால் நான் உடைந்தே போய் விடுவேன் என பதிவு செய்திருக்கிறார் வாகை சந்திரசேகர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam