1984 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்ட திரைப்படம் தான் “வைதேகி காத்திருந்தாள்”
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் ரேவதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் பாடல்கள் தான்.
“வைதேகி காத்திருந்தாள்” திரைப்படங்கள்:
அவரது இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது .
குறிப்பாக 80ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் இசையும் அவரது பாடல்களும் தான் என்றால் அது மிகை ஆகாது.
அந்த வகையில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைய இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது.
100 நாட்கள் ஓடிய வெற்றித்திரைப்படம்:
இத்திரைப்படம் 100 நாட்கள் ஓடி மிகப் பெரிய அளவில் சாதனை படைத்த திரைப்படமாக அப்போதே பார்க்கப்பட்டது.
வணிக ரீதியாக மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்ட “வைதேகி காத்திருந்தால்’ விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
பரட்டைத் தலை, அழுக்கு உடை அணிந்து தாடி மீசையுமாக அலங்கோலமாக வெள்ளைச்சாமி எனும் கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருப்பார்.
“நடிகை பிரமிளா ஜோஸ்”:
ஆதரவற்ற மனிதர் அவர் யாருடனும் வாய் திறந்து பேசமாட்டார். ஆனால், அந்த கிராமத்தில் தாகத்துக்கு தண்ணீரை சுமந்து ஊர் மக்களுக்கு தருவது அவருடைய பழக்கம்.
இப்படியாக ஊர் மக்களுக்கு வேலை செய்யும் அப்பாவி மனிதனாக அப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார்.
அவர் மிகச் சிறந்த பாடும் திறனை கொண்டிருந்தார்.
குறிப்பாக இரவு நேரங்களில் பாடல் பாடி அந்த ஊரையே தாலாட்டி மகிழ்வித்து வந்தார். இந்த படத்தில் வைதேகி என்ற கேரக்டரில் நடித்தவர்தான் “நடிகை பிரமிளா ஜோஸ்”.
கன்னட நடிகையான இவர் தமிழில் நடித்த “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படம் தான் அடையாளமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் மிக அழுத்தமான கதாபாத்திரமாக அது அப்படியே மக்கள் மனதில் பதிந்து விட்டது .
நடிகை “நடிகை பிரமிளா ஜோஸ்” குடும்பம்:
குறிப்பாக “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலிலும் “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” பாடல்களிலும் வந்து செல்லும் பிரமிளா ஜோஷின் முகத்தை இன்று வரை மக்களால் மறக்கவே முடியாது.
அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் திரைப்படத்தில் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோர் மனதையும் கவர்ந்து விட்டார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட சினிமாவில் மரணத்தை தழுவிய சிரஞ்சீவி சர்ஜாவின் அத்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகள் தான் நடிகை மேக்னா. சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியான மேக்னா நான்கு மாத கர்ப்பமாக இருந்தால் தற்போது அவரது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். மகனை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வரும் நடிகை மேக்னா தமிழ் திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.
தற்ப்போது பிரமிளா ஜோஷின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்னாவின் அம்மா தான் பிரமிளா ஜோஷா என பார்த்து வியந்து போய்விட்டார்கள்.
அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக “வைதேகி காத்திருந்தால் பட நடிகையா? இவங்க? என ஆர்ச்சயத்துடன் ஷேர் செய்ய அது தீயாய் பரவி வருகிறது.