தமிழும், மலையாளமும் உறவுமுறைகள் இதில் எந்த பேதமும் இல்லை. அதுபோலவே கலைஞர்கள் அனைவருமே மொழியை கடந்தவர்கள். அந்த வரிசையில் தற்போது வைரமுத்துவின் பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் தன் மலையாளம் கலந்த தமிழில் சொல்லி அசத்தி இருக்கிறார் நடிகை சம்யுத்தா.
கண்ணதாசன், வாலிக்கு பின்னால் பெருமளவு பேசக்கூடிய கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இடம்பிடித்துள்ளார்.இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக இருக்கும். மேலும் எதார்த்தமாக தன்னுடைய கற்பனை மூலம் பாடங்களை படைப்பதில் இவர் வல்லவர்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இவர் பல சினிமாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி இன்றும் அந்தப் பாடல் இளைஞர்களின் மத்தியில் முனு முனுக்க கூடிய வரிகளாக அமைந்திருப்பதுதான் இவரது பாடலின் தனி சிறப்பு.
எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பாடல் வரிகளைக் கேட்கும் போது மனதுக்கு இதமாக இருப்பதோடு சங்கடமான காலங்களில் கூட நம்மை தாங்கி பிடிக்கக்கூடிய வரிகளாக இருக்கக்கூடிய பாடல்களை வந்து அசத்தியிருக்கிறார்.
ஒரு பொன் மாலைப் பொழுது என்ற பாடல் வரிகளோடு ஆரம்பித்த இவரது வாழ்வு கள்ளிக்காட்டு இதிகாசம் வரை இன்று இணையில்லாத தொடர்கதையாக வளர்ந்து கொண்டு வருகிறது.
தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயங்களை இவர் சாதித்திருக்கிறார்.எனவே இந்தக் கலைஞனுக்கு செல்லும் இடமெல்லாம் புகழ்தான் என்பதை உணர்த்துவது போல ஒரு பேட்டியில் சம்யுத்தா இவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
இவருக்கு வைரமுத்துவின் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள தோடு அந்த வரிகளை மலையாளம் கலந்த தமிழில் பேசிய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் பிடித்த வரிகளாக அவர் சொன்னது பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற பாடல் வரியும் காற்றே என் வாசல் வந்தாய் மற்றும் கொஞ்சும் மைனாக்களே… உள்ளிட்ட பல பாடல் வரிகளை குறிப்பிட்டு அவர் பேசிய விதம் மலையாளம் கலந்த தமிழில் மனதிற்கு இதமாக இருந்தது.
தற்போது இந்த காணொளியை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தோடு மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்ல நான் பரவசமானேன். மகளே தமிழும் மலையாளமும் உறவு மொழிகள் நாம் கலையால் ஒன்றுபடுவோம், காலத்தை வென்று விடுவோம் என்று பகிர்ந்துள்ளார்.
இந்த வரிகளைப் பார்த்து மேலும் வைரமுத்துவின் மீது தீராத பற்று ஏற்பட்டு இருக்கும் என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார் மலையாள நடிகை சம்யுத்தா.