“மன சஞ்சலத்தை போக்கும் வாலீஸ்வரர்..! – ஒருமுறை போய் பாருங்கள்..!

 வாலீஸ்வரர்: ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் சஞ்சலம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அதிலும் குடும்பம் குட்டி என்று இருப்பவர்களுக்கு என்ன செய்வது, எப்படி செய்வது என்ற சிந்தனைகளின் மூலம் மன சஞ்சலம் அதிகரித்து விடும்.

 அப்படி மனச சஞ்சலத்தால் அவதிப்படுபவர்கள் அவர்களின் சஞ்சலம் நீங்க வாலி கண்ட புரத்தில் இருக்கும் வாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் போதும். விரைவில் உங்களது சஞ்சலம் மறைந்து உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

Valeeswarar Temple

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாலி கண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகையோடு இணைந்து வாலீஸ்வரர் நமக்கு காட்சி தருகிறார்.

பல்வேறு சரித்திர சிறப்புகளை பெற்றிருக்கக் கூடிய இந்த கோயில் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, குடமுழுக்கு விழா நடந்துள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

மேலும் இந்தக் கோயில் ஆனது ஏழு நிலை ராஜகோபுரங்களுடன் மிகவும் கம்பீரமாக உள்ளது. இந்த கோயிலில் 134 கல்வெட்டுகளும் உள்ளது.இக்கோயில் தல விருச்சமானது மாவலிங்கம் மரம் ஆகும்.

Valeeswarar Temple

இந்தக் கோயிலில் இருக்கும் சுவாமிக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பான முறைகளில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் நீங்கள் இவரை தரிசிக்கும் போது உங்கள் சஞ்சலம் நீங்கி சங்கடங்கள் மாறும். அது மட்டுமல்லாமல் மனதிற்கு வலிமை தரக்கூடிய நிலையை இந்த கடவுள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார்.

தற்போது எந்த கோயில் ஆனது இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பில் உள்ளதோடு மட்டுமல்லாமல், இந்திய தொல்பொருள் இலாகா கட்டுப்பாட்டிலும் உள்ளது.

அம்மனின் சந்நிதியை கடந்து சென்றாள் ஐயனின் கருவறை உள்ளது. இங்கு இவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். வடக்கு நோக்கி தண்டத்தோடு காட்சி தரும் இவர் பக்தர்கள் வேண்டியதை வழங்கக்கூடிய அருள் உள்ளம் கொண்டவர்.

Valeeswarar Temple

மேலும் எந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு 1008 லிங்கம் வடிவமைக்கப்பட்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது தான். இந்த திருக்கோயிலின் பெயருக்கான காரணம் என்னவென்று பார்த்தால் ராமாயணத்தில் வானரத் தலைவரான வாழி ஈஸ்வரனை வழிபட்ட திருத்தலமாக இது விளங்குவதால் வாலீஸ்வரன் என்ற பெயரை பெற்றுள்ளது.

மேலும் ராமன் சீதையைத் தேடி இலங்கை சென்ற வழியில் வாலியை கண்ட இடம் இது என்பதால் வாலி கண்ட புரம் என்ற பெயரை கொண்டுள்ளதாக தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலானது தினமும் காலை ஆறரை மணி முதல் 11 மணி வரையும் பிறக்கும் மாலை 4:30 மணி முதல் 7 மணி வரையும் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுடைய சஞ்சலங்கள் நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் வாலி கண்ட புரம் சென்று வாலீஸ்வரரை வணங்கி வாருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …