பிரபாஸின் எக்ஸை நான் தான் இப்போ மெயிண்டெய்ன் பண்ட்றேன்.. அஜித் பட நடிகர் பகீர்…!

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர ஹீரோவான பிரபாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் டாப் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகர் என்ற இடத்தையும் பிடித்திருக்கிறார்.

நடிகர் பிரபாஸ்:

கடந்த 24ஆம் ஆண்டு வருஷம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் இவருக்கு உலகப் புகழ் தேடி தந்த திரைப்படம் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான். ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் மூலமாக உலகம் முழுக்க ஃபேமஸானார் பிரபாஸ் .

அந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாகவும் வாழ்க்கை முழுக்க அடையாள படமாகவும் இருந்து வருகிறது.

பாகுபலி வெற்றி:

பாகுபலி படத்தை தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படமும் பிரபாஸுக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த படங்களின் வசூல் இன்று வரை மற்ற படங்கள் முறியடிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான பாகுபலி 2 திரைப்படம் ரூ.1800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்த படமாக முத்திரை பதித்தது.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த வேறு எந்த படமும் அவ்வளவாக வெற்றி பெறவும் இல்லை. ரூ. 1800 கோடி வசூலை முறியடிக்கவும் இல்லை.

தொடர்ந்து அவர் தன்னுடைய பிரபலத்தை வைத்து சலார் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதில் சலார் திரைப்படம் ரூ. 700 கோடி மட்டுமே வசூலை ஈட்டியது. தற்போது பிரபாஸ் கல்கி திரைப்படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தீபிகா படுகோன் , திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலமான நட்சத்திர நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

வருகிற ஜூன் 27ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி பாகுபலி வசூலை முறியடிக்குமா என காத்திருக்கிறார்கள் பட குழுவினர்.

பிரபாஸின் எக்ஸை நான் தான் மெயின்டைன் பண்றேன்:

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் மூலமாக வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடித்து வந்த கார்த்திகேயா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் குறித்து ஒரு ஷாக்கிங் ஆன தகவலை கூறி இருக்கிறார்.

அதாவது பிரபாஸின் எக்ஸை நான் தான் இப்போது மெயின்டைன் செய்து வருகிறேன். எனக்கு கூறி இருக்கிறார்.

இதை கேட்டதும் ஷாக்கான தொகுப்பாளர் என்ன சொல்றீங்க என ஒரு நிமிடம் அதிர்ந்து போக, நான் நடிகர் பிரபாஸின் பழைய காரன ஜாகுவார் காரை விலை கொடுத்து வாங்கியுள்ளேன் என்றார் கார்த்திகேயன்.

அந்த காரை தற்போது இவர் நான் தான் பயன்படுத்தி வருகிறேன் என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்
ஜாகுவார் காரை கார்த்திகேயாவுக்கு கொடுத்துவிட்டு தற்போது பிரபாஸ் அல்டிமேட் ஆக உருவாக்கப்பட்ட புஜ்ஜி காரை பயன்படுத்தி வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 44 வயதாகும் பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பது குறிப்பிடுத்தக்கது. இவர் முன்னதாக நடிகை அனுஷ்கா ஷெட்டியை பாகுபலி திரைப்படத்தின் நடித்த போதிலிருந்தே காதலித்து வந்தார்.

பின்னர் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து பிரித்து விட்டார்கள்.

அடுத்ததாக பிரபாஸ் தன்னுடன் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை கிருத்தி சனோன் காதல் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version