குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தியை கூட்டும் வல்லாரை சட்னி..! – எப்படி செய்யலாம் பார்க்கலாமா?

 இன்று இருக்கும் வேகமான யுகத்தில் அடிக்கடி ஞாபக மறதிகள் ஏற்படுகிறது. இதில் சிறுவர்கள் அதிக அளவு பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் இந்த ஞாபக மறதியை எளிதாக இயற்கை முறையில் சரி செய்யக்கூடிய வல்லாரையை கொண்டு செய்யப்படுகின்ற சட்னியை எப்படி செய்யலாம் என்பதை இப்போது காணலாம்.

வல்லாரை சட்னி செய்ய தேவையான பொருட்கள்

1.வல்லாரை 100 கிராம் அளவு

2.25 கிராம் கடலைப்பருப்பு

3.25 கிராம் உளுத்தம் பருப்பு

4.புளி சிறிதளவு

5.உப்பு தேவைக்கேற்ப 6.வணக்குவதற்கு தேவையான அளவு எண்ணெய்

6.சிறிதளவு மஞ்சள்

7.பெருங்காயம் தூள் சிறிதளவு

8.வரமிளகாய்

 செய்முறை

 முதலில் வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு இதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து இளம் சூட்டில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

 பொன் நிறமாக வறுபட்டவுடன் காரத்திற்கு தேவையான அளவு வரமிளகாயையும் போட்டு வறுத்துக்கொள்ளவும். இப்போது இதனுடன் நறுக்கி வைத்திருக்க கூடிய வல்லாரையை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை நன்கு பிரட்டி எடுக்கவும்.

 சட்னிக்கு தேவையான உப்பு மஞ்சள் பொடியை சேர்த்து மீண்டும் வதக்கவும். பச்சை வாசனை சென்று விட்டதை உணர்ந்து விட்டால் இந்த கலவையை குளிர வைத்து அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்தால் ஞாபக மறதியை தடுக்கக்கூடிய வல்லாரைக்கீரை தயார்.

 இந்தக் கீரையை சாதத்தோடு இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மேலும் சட்னியை இறக்கி வைத்த பின் சிறிதளவு பெருங்காயத்தூளை போட்டு நன்கு கலக்கி விட வேண்டும். இந்த சட்னியை வாரத்துக்கு ஒருமுறை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதின் மூலம் ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version