அந்த வயசுலையே அது முடிஞ்சுருச்சு.. – வெளிப்படையாக கூறிய நடிகை வாணி போஜன்..!

வாணி போஜன் சமீபத்திய வெள்ளித்திரை புதுவரவு. ஆனால் சின்னத்திரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஒரு முகம்.

பல நடிகர் நடிகைகள் சின்னத் திரையிலிருந்து விலகி சினிமாவில் கலக்கி வருகின்றனர். அதில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன் என்று கூறலாம். சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர். வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு மகான் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தின் நீளம் கருதி இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் தன்னுடைய சின்ன வயது ஆசைகளெல்லாம் சிறுவயதிலேயே முடிந்து முடிந்து போய்விட்டது என்று கூறியுள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது, எனக்கு விமானத்தில் ஏற ஹோஸ்டர்ஸ் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. அப்படி இல்லை என்றால் மாடலாக பணியாற்ற வேண்டும் என்று ஆசை இந்த இரண்டும் எனக்கு நிலைக்கவில்லை.

நான் டிகிரி படுத்திருந்தாலும் டிகிரி வாங்காமலேயே இருக்கின்றேன். அதனால் எனக்கு கிடைக்க இருந்த மேனேஜர் வேலை தவறிப் போனது. அதை நம்பி விமான பணிப்பெண் வேலையை விட்டு மிகவும் கஷ்டப்பட்டேன்.

அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் மாடலிங் செய்து வந்தேன். அதன் மூலம் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. குறும்படங்கள், திரைப்படங்கள் என தற்போது என்னுடைய பாதையே மாறிவிட்டது.

தெய்வமகள் என்ற சீரியல்தான் என்ன இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்த ஒரு விஷயம். நான் என்னுடைய ஏர்ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த பொழுது என் கையில் இருந்தது வெறும் 320 ரூபாய் தான்.

ஆனால் தற்போது எனக்கு சொந்தமாக சென்னையில் வீடு இருக்கிறது. கார் வைத்து இருக்கின்றேன். நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை. உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம் உங்களை விட்டு போகின்றது. அல்லது நீங்கள் அதை தவற விடுகிறீர்கள். ஏதேனும் சூழ்நிலை காரணமாக உங்களுக்கு ஒரு பிடித்த ஒரு விஷயம் கிடைக்காமல் போய்விடுகிறது என்றால் அங்கே சோர்ந்து விட வேண்டாம்.

தொடர்ந்து உங்களுடைய வாழ்க்கை பாதையை சிறப்பாக முயற்சி செய்து கொண்டே இருங்கள். நிச்சயமாக உங்களுக்கான நேரம் வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கையும் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக மாறும். இதனை ஆத்மார்த்தமாக நம்புங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …