சீரியலில் அது இல்ல.. சினிமாவில் இது இருக்கு.. மறுக்கவே மாட்டேன்.. வாணி போஜன் ஓப்பன் டாக்..!

சின்னத்திரையின் சின்ன நயன்தாரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஆரம்ப நாட்களில் சின்னத்திரை நடிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தவர்.

வாணி போஜன்..

 

வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியலில் தனது பிரமாதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பெரிய திரையில் ஒ மை கடவுளே படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து ஓர் இரவு, அதிகாரம் 79 போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சீரியல்களிலும் மிகச் சிறப்பாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ஆகா, மாயா, லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருக்கும் இவர் லாக்கப், மகான், மிரள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

சின்னத்திரை பெரிய திரை என்ற சக்கை போடு போட்டு வரும் இவ சீரியல்களிலும் அதிக அளவு ஆர்வத்தை காட்டி வருகிறார். இதனை அடுத்து ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்கலம் போன்ற வெப் சீரியல்களில் நடித்து உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை மகிழ்விக்க கூடிய வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

நேரம் கிடைக்கிறது…

 

இந்நிலையில் சீரியலுக்கும் சினிமாவிற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்று மிகவும் சிறப்பான முறையில் வாணி போஜன் விளக்கி இருக்கிறார்.

மேலும் சீரியலில் அது இல்லை, ஆனால் சினிமாவில் அது இருக்கு மறுக்கவே மாட்டேன் என வாணி போஜன் ஓப்பன் டாக் தந்ததை அடுத்து ரசிகர்கள் அப்படி என்ன தான் அதில் இருக்கு என்பதை அறிந்து கொள்ள துடித்து வருகிறார்கள்.

அவர் கூறிய பதிலில் சீரியலில் ஐந்து வருடம் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கூட ஒரு இடத்தில் அமர்ந்து என்னை பற்றியோ, என் வாழ்க்கை பற்றியோ, யோசிக்க நேரம் கிடைக்காது.

ஆனால் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்த பிறகு நிறைய நேரம் நமக்காக கிடைக்கும். அதனை நாம் நமக்காக செலவிடலாம். இதில் நாம் எப்படி இருக்கிறோம், எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற விஷயங்களை மிக எளிதில் யோசிக்க முடியும்.

ஆனால் அதுவே சீரியல் என்றால் நடிக்கும் போது யோசிக்கக்கூட நேரம் கிடைக்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் ஒரு காட்சி முடிந்த பிறகு இன்னொரு காட்சி அந்த காட்சி முடிந்த பிறகு அடுத்த காட்சி என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்போம்.

ஆனால் அதுவே சினிமா என்றால் நாம் அமர்ந்து ஓய்வெடுக்க சில மணி நேரம் நமக்கு கிடைக்கும். இதை என்னால் என்றுமே மறக்க முடியாது என்று வாணி போஜன் கூறி இருக்கும் இந்த செய்தி தற்போது ட்ரெண்டிங் ஆன செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது.

உண்மை தான் அவர் கூறியபடி நம்மைப் பற்றி நினைக்க நேரம் கூட தராத சீரியல் விட நீண்ட நேரம் இடைவெளி கொடுத்து நம்மை பற்றிய நினைவுகளில் நீண்ட உதவும் சினிமாவில் நடிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam