ஏண்டா டே.. அந்த நேரத்துல நான் பீரியட்ஸ்ல இருந்தேன் டா.. வைரலான புகைப்படம்.. வாணி போஜன் பதிலடி..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகைகளின் ஒருவராக திகழும் வாணி போஜன் மிகச்சிறந்த மாடல் அழகாகவும், விளம்பர படங்களில் நடித்த நடிகையாகவும் இருந்தார்.

இதனை அடுத்து இவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரின் மூலம் அறிமுகமானார்.

நடிகை வாணி போஜன்..

1988-ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்த இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இல் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது பலருக்கும் தெரியாது. அப்படி அவர் பணியாற்றும் போதே விளம்பர வேலைகளை பார்த்த இவர் வடிவமைப்பு விளம்பரம் மூலம் தான் சின்னத்திரைக்கு வந்தார்.

சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படக்கூடிய வாணி போஜன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாயா தொடரிலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் தொடரிலும் நடித்து அசத்தியவர்.

இதில் இவருக்கு மிக நல்ல பெயரையும் பேமஸையும் பெற்று தந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற சீரியல். இதனை அடுத்து இவர் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, அசத்தல் சுட்டீஸ், காமெடி ஜங்ஷன் போன்றவற்றில் விருந்தினராகவும், தலைவராகவும் பங்கேற்று இருக்கிறார்.

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து 2010-ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் அவந்திகா கேரக்டரை செய்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2018-ல் அதிகாரம் 79 இல் நடித்த இவர் ஓ மை கடவுளே என்ற படத்தில் 2020-இல் நடித்து பிரபலமானார்.

அந்த நேரத்துல  பீரியட்ஸ்ல இருந்தேன்..

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

மேலும் இவர் அண்மையில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய இயற்கை உபாதையான மாதவிடாய் குறித்து சில விஷயங்களை பேசி இருப்பது இணையங்களில் வைரலாக மாறியுள்ளது.

அத்தோடு இது பற்றி பேசும் போது ஒவ்வொரு மாதமும் பெண்கள் குறிப்பிட்ட அந்த நாட்களை கடந்து வர வேண்டிய சூழல் இருக்கிறது. குறிப்பாக எனக்கு அந்த நாட்களில் உடல் நலமில்லாமல் போவது வாடிக்கை.

வைரலான புகைப்படம்.. வாணி பதிலடி..

உடல் அசதியாக இருக்கும்.. முகம் வீங்கி விடும். அப்படி ஒரு நாளில் ஒரு படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தேன். 

.அப்போது எடுத்த என் புகைப்படங்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டேன்.. பிளாஸ்டிக் சர்ஜரி தவறாக போய்விட்டது என்றெல்லாம் வைரலாக்கினார்கள்.

அதை பார்த்த போது ஏண்டா டே.. அந்த நேரத்துல நான் பீரியட்ஸ்ல இருந்தேன் டா.. என சொல்ல தோன்றியது என பேசியுள்ளார் வாணி போஜன்.

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளதொரு மட்டுமல்லாமல் வாணி போஜன் பகிர்ந்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களோடு கலந்து உரையாடி அவர் பேச்சில் உண்மை உள்ளது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு மாதவிடாய் சமயத்தில் உடலில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியாமல் அது பற்றி அவர்களே கற்பனையில் எழுதி அதை தெறிக்க விட்டது பற்றி ரசிகர்கள் இதைத்தான் கண்ணு மூக்கு காது வைத்து பேசுவாங்க என்று சொல்கிறார்களா என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version