பேரழகி.. வெள்ளியில் ப்ரா.. விழாவை தெறிக்க விட்ட வாணி போஜன்..! குவியும் லைக்குகள்..!

சின்னத்திரை மூலமாக வெள்ளி திரைக்கு சென்று பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். பொதுவாக சீரியலில் நடிக்கும் நடிகைகளை எந்த ஒரு இயக்குனரும் கதாநாயகியாக படங்களில் நடிக்க வைப்பதற்கு யோசிப்பது கிடையாது.

அதனால்தான் சன் டிவி விஜய் டிவி மாதிரியான சேனல்களில் இளம் நடிகைகள் பலர் சீரியலில் நடித்து வந்தாலும் கூட அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஏனெனில் சீரியலில் நடிக்கும் நடிப்பு என்பது வேறு சினிமாவில் நடிக்கும் நடிப்பு என்பது வேறு இவற்றையெல்லாம் தாண்டி சீரியலிலேயே யாராவது ஒரு நடிகை தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தால் அவர்களை சில இயக்குனர்கள் இனம் கண்டு கொள்வார்கள்.

சின்னத்திரை வாய்ப்பு:

அப்படியான நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை வாணி போஜன். ஊட்டியை சேர்ந்த வாணி போஜன் அரசு கல்லூரியில் தனது படிப்பை முடித்த பிறகு ஏர் ஹோஸ்டர்ஸ் வேலைக்கு சென்றார்.

விமான நிறுவனங்களுக்கு சென்று பணிபுரிந்து வந்தார். அவர் பி.ஏ இங்கிலீஷ் படிப்பை முடித்த காரணத்தினால் அவருக்கு ஆங்கிலம் எளிதாக வந்தது. அதனால் அந்த வேலையும் அவருக்கு எளிமையானதாக இருந்தது.

இந்த நிலையில்தான் மாடலிங் துறையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது மாடலிங் துறையில் அழகான பெண்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் எளிதாகவே கிடைத்துவிடும். அந்த வகையில் வாய்ப்பை பெற்ற வாணி போஜன் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் ஒரு மாடலாக நடித்திருந்தார்.

படங்களில் வரவேற்பு:

அப்பொழுது சில இயக்குனர்களால் இவர் பார்க்கப்பட்டார். அந்த விளம்பரத்தில் அவருடைய நடிப்பு தனித்துவமானதாக இருந்தது இதற்கு நடுவே சீரியலிலும் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது. நிறைய சீரியல்களில் அவர் நடித்திருந்தாலும் கூட சன் டிவியில் அவர் நடித்த தெய்வமகள் சீரியல்தான் முக்கியமானது என்று கூறலாம்.

அந்த சீரியலில் அதிகம் பிரபலம் அடைந்ததை அடுத்து வாணி போஜனம் அதிக பிரபலம் அடைந்தார். தெய்வமகளுக்கு பிறகு லஷ்மி வந்தாச்சு என்கிற ஒரு சீரியலிலும் இவர் நடித்திருந்தார். தமிழில் 2019 ஆம் ஆண்டு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்து வந்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

2020ல் வந்த ஓ மை கடவுளே திரைப்படம் வந்த பிறகு 2024க்குள் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து விட்டார் வாணி போஜன். தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் வாணி போஜன் மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்கு அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் ஒரு விழாவிற்கு சென்ற புகைப்படங்கள் தான் சமீபத்தில் ட்ரண்டாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version