என் காது படவே அப்படி பேசுனாங்க.. முன்னணி நடிகர் குறித்து வாணி போஜன் பகீர்..!

சினிமாவில் சில படங்களில் நடித்து, புகழ் அடைந்து விட்டால் அவர்களை கொண்டாடாத சினிமாத் துறை சார்ந்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றவர்களை யாரும் தவறாக விமர்சிப்பதில்லை. காரணம், அவர்களது இமேஜ், தங்களது வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதால்தான்.

ஆனால் அதுவே துவக்கத்தில் சினிமாவில் நுழையும் அந்த காலகட்டத்தில், பலரும் அவர்களை உதாசீனப்படுத்துவார்கள். ஏளனம் செய்வார்கள், அவர்கள் குறித்து மிக மோசமாக விமர்சிப்பார்கள்.

வாணி போஜன்

அது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை பெற்றிருக்கிறார் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை வாணி போஜன்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாணி போஜன், துவக்கத்தில் விமான பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதன் பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பர படங்களில் நடி்த்தார்.

தெய்வ மகள் சீரியல்

விளம்பரங்கள் தந்த புகழ் வெளிச்சத்தில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், ஓ மை கடவுளே படத்தில் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு சினிமாவில் கிடைத்த வாய்ப்பு, பிரபல நடிகரால் பறி போனது குறித்து, சமீபத்தில் அவர் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வாணி போஜன், முன்னாள் நடிகர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். படத்தின் இயக்குனர் என்னை ஒப்பந்தம் செய்திருந்தார்.

மனதை பாதித்தது

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, அந்த முன்னணி நடிகர் பேசிய விஷயம் என்னுடைய மனதை மிகவும் பாதித்தது. என்னுடைய காதில் படும்படியே அவர் பேசினார்.

என்ன கூறினார் என்றால், இவங்க சீரியல் நடிகைதானே, எதற்காக படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள், வேறு யாரும் இல்லையா என்று கேட்டார்.

சீரியல் நடிகை

சீரியல் நடிகையாக இருந்தால் என்ன…? சினிமா நடிகையாக இருந்தால் என்ன..? ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வந்திருக்கிறேன். சீரியல் நடிகை என்பதால் படத்திலிருந்து ஒதுக்குவதா..? இதனை கேட்டுவிட்டு நான் அந்த படத்தில் நடிக்க வேண்டுமா..? என்று யோசித்தேன்.

அதன் பிறகு அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து நானே படத்திலிருந்து விலகி விட்டேன்.

அந்த நடிகர் யார்?

பொதுவாக கேட்கிறேன், நடிகை என்றால் நடிகை தான். அதில் என்ன சினிமா நடிகை, சீரியல் நடிகை. எதுவாக இருந்தாலும் நடிக்க தான் போகிறோம். ஆனால் இப்படி சினிமா நடிகைகள் முன்பு சீரியல் நடிகைகள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்பதை நான் கண்கூட பார்த்தேன். அந்த நடிகர் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை என நடிகை வாணி போஜன் பதிவு செய்திருக்கிறார்.

சீரியல் நடிகையை எதுக்காக இந்த படத்தில் கமிட் செய்தீர்கள் என்று என் காது படவே அப்படி இழிவாக பேசுனாங்க என்று முன்னணி நடிகர் குறித்து வாணி போஜன் பகீர் தகவலை கூறியிருப்பது, வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version