எனக்கு எந்த விஷ்யத்துல திருப்தி கிடைக்குதான்னு தான் பாப்பேன்.. வாணி போஜன் தடாலடி..!

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet

இதற்கு காரணம் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைப்பதே பெரிதாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் இவர் எப்படி இருந்தால் தான் நடிக்கணும் என்று தான் நினைப்பது பற்றி விரிவாக பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை வாணி போஜன்..

நடிகை வாணி போஜனை பொறுத்த வரை ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆகா தொடரில் அறிமுகம் ஆனார்.

மாடல் அழகியாக திகழ்ந்த இவர் ஜெயா டிவியில் வெளி வந்த மாயா தொடரிலும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் சீரியலிலும் நடித்திருக்கிறார்.

இதில் குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் தனக்கு என்று ஓர் தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட வாணி போஜன் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

ஊடகத் துறைக்கு வருவதற்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மை பேட்டியில் பேசி இருக்கும் விஷயம் பற்றி விரிவாக படிக்கலாம்.

அந்த விஷயத்துல திருப்தி கிடைக்குதான்னு பார்ப்பேன்..

தற்போது திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய வாணி போஜன் படத்தில் தனக்கு திருப்தி கிடைக்கும் என்று இருந்தால் மட்டும் தான் நடிப்பேன் அதை விடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 மேலும் ஒரு படம் செய்யும் போது அந்த அனுபவம் அவருக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வளர்ச்சியின் அடுத்து அடுத்து நாம் அடைய முடியும் என்று கூறியிருக்கிறார்.

சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி மனதுக்கு பிடித்து ஒரு நல்ல படமாக இருக்கும் போது தான் அதை செய்ய வேண்டும்.எனவே சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல படங்களை ஏற்றுக் கொள்வத வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று கூறிவிட்டார்.

வாணி போஜனின் தடாலடி பேச்சு..

மேலும் எனக்கு இந்த சம்பாத்தியத்தை வைத்துத்தான் குடும்பத்தை தள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாததை அடுத்து பொறுத்து நிதானமாக நல்ல படங்களை தேர்வு செய்து வருடத்திற்கு ஒரு படமோ அல்லது இரண்டு படமோ செய்தால் போதுமானது.

எனவே அதிக அளவு படங்களை எடுத்து நடித்து சிரமப்பட்டு கஷ்டப்பட்டு நடிப்பதை விட ஒரு படத்தில் நடித்தாலும் சிறப்பான முறையில் நடித்து நல்ல விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும்.

எனவே நான் நடிக்கின்ற படம் எனக்கு திருப்தி கொடுக்கக் கூடிய வகையில் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று வாணி போஜன் தடாலடியாக பேசியிருக்கும் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தடாலடியாக வாணி போஜன் சொன்ன விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர் சொல்வதில் ஒரு அர்த்தம் உள்ளது என்று அவருக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version