சன் டிவியில் பட்டையை கிளப்பி வந்த தெய்வமகள் சீரியலில் சத்தியாவாக தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் வாணி போஜன். சின்னத்திரை நடிகை என்றாலும் பெரிய திரையில் நடிகை போலவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இப்போதெல்லாம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரையை நோக்கி நகருவர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. அந்த வரிசையில் வாணி போஜனுக்கு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்களின் மூலம் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி அந்தப் படத்தில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி பெரிய திரையிலும் தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.
தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வரிசையில் இவர் மலேசியா டு அம்னீசியா படத்தில் நடித்த இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்தை மிக எளிதாகவும், யதார்த்தமாகவும் நடித்ததால் பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தாள்.
அது மட்டுமல்லாமல் கட்டினால் இந்த மாதிரியான பெண் தான் தனக்கு வேண்டும் என்ற உணர்வை ஆண்களின் மத்தியில் விதைத்து சென்றார்.
அந்தளவுக்கு வாணி போஜன் இன் நடிப்பு ஆண்களை கவர்ந்து விட்டது. இப்போது சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய இவர் அவ்வப்போது வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் புடவையில் மகாலட்சுமி போல் காட்சியளிக்கிறார்.
என்ன தான் மாடல் உடைகள் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்தாலும் புடவைக்கு என்றும் தனி மவுசு உள்ளத்தை இவர் வெளிபடுத்தி உள்ளார். போட்டோவை பார்க்கும் போது இவர் காட்டியிருக்கும் புடவை அழகா அல்லது இவர் அழகா என்பதை கேட்பது போல் உள்ளது.
தற்போது வாணிபோஜன் வெளியிடக்கூடிய புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது அந்த வகையில் தற்போது சேலையில் அழகாக சரிய விட்டு முன் அழகு இடுப்பு என வஞ்சனையில்லாமல் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்.