என்ன பண்ணாலும் இதை மாத்த மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..!

இன்று தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம் சின்னத்திரையில் வளர்ச்சி. சின்னத்திரையில் ஆரம்ப காலத்தில் சீரியல்களில் நடித்து வந்த சீரியல் நடிகை வாணி போஜன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக விளங்கியவர். இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமானார்.

நடிகை வாணி போஜன்..

வாணி போஜன் தனது முதல் தொடரிலேயே மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா தொடரிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்ததை அடுத்து விளம்பரத்துறையில் காலடி எடுத்து வைத்து சீரியலில் நடித்தார்.

அத்தோடு இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் பெரும்பாலான இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, விஜய் தொலைக்காட்சியில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் தலைவியாக பணி புரிந்து இருக்கிறார்.

மேலும் இவர் சன் டிவியில் காமெடி ஜங்ஷன், அசத்தல் சுட்டிஸ் போன்றவற்றில் விருந்தினராகவும், தலைவியாகவும் பணியாற்றி தற்போது வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறி விட்டார்.

அந்த வகையில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் 2010-ல் அறிமுகமான இவர் அதிகாரம் 79 படத்தில் டாக்டர் பூஜாவாக நடித்திருப்பார். இதனை அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடித்த இவர் 2020-இல் ஓ மை கடவுளே படத்தில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய வாணி போஜன் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை உடுத்தி ரசிகர்களை கவர் செய்து விடுவார்.

எப்பவுமே இத மாத்த மாட்டேன்..

இந்நிலையில் இன்று ஊடகங்கள் பெருந்துவிட்ட நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜனிடம் நீங்கள் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டீர்கள்.

இதனால் நிறைய பணம் சம்பாதிக்கிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் வைத்திருந்த அதே குட்டியான காரைத் தான் தற்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்னும் ஏன் உங்களுக்கு அதை மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இந்த கேள்விக்கு நடிகை வாணி போஜன் அளித்த பதில் அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

அப்படி என்ன அவர் அதற்கான பதிலை தந்திருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கு என்று ஒரு சென்டிமென்ட் இருக்கும் அல்லவா? அந்த சென்டிமென்டை ஒட்டி தான் சென்டிமென்டலாக இவர் பதிலை தந்திருக்கிறார்.

உறுதியான பேச்சில் மயங்கிய ரசிகாஷ்..

அவர் தந்த பதிலில் அந்த கார் வாங்கிய பிறகு தான் தனக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. அந்த கார் என்னுடைய லக்கியான கார். என் வாழ்க்கையில் எதை செய்தாலும் இதை மட்டும் நான் என்னிடமிருந்து மாற்றிக் கொள்ள மாட்டேன்.

இதையும் படிங்க: அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்..

மேலும் இந்த காரை நான் எப்போதும் பயன்படுத்துவேன். ஒரு வேளை எதிர்காலத்தில் புதிய கார் வாங்கினால் கூட இந்த காரையும் என்னுடனே வைத்திருப்பேன் என்று சென்டிமென்டலாக கூறியிருக்கிறார்.

வாணி போஜன் தற்போது இந்த கார் குறித்து சென்டிமென்ட் ஆக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம். அதன் மூலம் உங்களது நிலைப்பாடு என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்வோம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version