ரித்திகா சிங்கை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. வாணி போஜன் சொல்வதை கேட்டீங்களா..?

சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து அதன் மூலமாக வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை வாணி போஜன். வாணி போஜனை பொறுத்தவரை தெய்வமகள் என்கிற சீரியல்தான் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்த சீரியல் என்று கூறவேண்டும்.

தெய்வமகள் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பொழுது அதற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தது. அந்த சீரியலின் மூலமாகதான் வாணி போஜன் தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

சீரியல் மூலம் வரவேற்பு:

அதற்கு பிறகு அவருக்கு ஹாட்ஸ்டாரில் ட்ரிபில்ஸ் என்கிற வெப் சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதே சமயத்தில் தான் தமிழில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஓ மை கடவுளே திரைப்படத்தில் கதாநாயகிக்கு அடுத்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு வாணி போஜனுக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தது ஆனால் அவர் நடித்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் வாணி போஜன் இப்பொழுதும் ஒரு அறிமுக நடிகையாகவே இருந்து வருகிறார்.

அவர் நடித்த மலேசியா டூ அம்னீசியா, பாயும் ஒலி நீ எனக்கு, மிரள் மாதிரியான திரைப்படங்கள் எதுவுமே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் வாணி போஜன்.

இயக்குனர் சொன்ன கதை:

இந்த நிலையில் வாணி போஜனும் நடிகை ரித்திகா சிங்கும் சேர்ந்து நடித்த திரைப்படம் ஓ மை கடவுளே. அந்த திரைப்படத்திலிருந்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வாணி போஜனுக்கு இயக்குனர் ஒருவர் கதை சொல்லியுள்ளார்.

அந்த கதை அவ்வளவாக பிடிக்கவில்லை எனவே அதில் நடிக்கவில்லை என்று வாணி போஜன் கூறிவிட்டார். அதற்கு பிறகு அந்த கதையை இயக்குனர் ரித்திஹா சிங்கிடம் சென்று கூறி இருக்கிறார். ரித்திஹா சிங்கும் அந்த கதை ஓகே என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் வாணி போஜனின் நண்பர் ஒருவர் போன் செய்து அது நல்ல கதை அது, அதில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் அதனைக் கேட்ட வாணி போஜன் பிறகு இயக்குனரை டீக்கடைக்கு வரச் சொல்லி அவரிடம் கதையை முழுமையாக கேட்டிருக்கிறார்.

அப்பொழுது அந்த கதை வாணி போஜனுக்கு பிடித்து விட்டது உடனே அதில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ரித்திஹா சிங்கிற்காக தயார் செய்த செக்கை வாணி போஜனிடம் கொடுத்துவிட்டு இயக்குனர் சென்று இருக்கிறார்.

இந்த விஷயத்தை பகிர்ந்த வாணி போஜன் அந்த நிகழ்வு நடந்த பொழுது ஏற்கனவே ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்து விட்டனர் என்று எனக்கு தெரியாது. அதற்கு பிறகு இப்போது வரை நான் ரித்திகா சிங்கை நேரில் சந்திக்கவே இல்லை சந்தித்திருந்தால் இது குறித்து பேசி இருப்பேன் என்று கூறுகிறார் வாணி போஜன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version