நான் அரசியலுக்கு வந்தால் இதை பண்ணுவேன்.. வாணி போஜன் அதிரடி..!

சின்னத்திரையில் இருந்து நடிகர்கள் பெரும்பாலும் எளிதாக வெள்ளி திரைக்கு வந்து விடுவார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை சிலர் மட்டும் தான் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் கதாநாயகி ஆகியுள்ளனர்.

அப்படி கதாநாயகியான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். தமிழில் வந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் முதன்முதலாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தார் வாணி போஜன்.

இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை வாணி போஜன். பெரும் கதை அமைப்புகளை கொண்ட திரைப்படங்களில் கூட வாணி போஜனுக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது.

வெப் சீரிஸில் எண்ட்ரி:

இந்த நிலையில் அடுத்து ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் வாணி போஜன். சிங்களம் என்கிற இந்த வெப்சீரிஸ் குறித்து பேட்டியில் பேசும்பொழுது சில முக்கியமான விஷயங்களை பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது இந்த படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறும்பொழுது இதில் சின்ன பசங்களுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம் தான் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் பார்த்த பொழுது தான் தெரிந்தது படத்தில் எனக்கு மகனாக நடித்தவர் வயதில் அதிகமானவராக இருந்தார்.

மேலும் இடைவேளை வரை கதை என்னவென்று கூறிய இயக்குனர் இடைவேளைக்கு பிறகு என்ன கதை என்பதை என்னிடம் கூறவே இல்லை நான் பலமுறை கேட்டேன் ஆனால் அவர் என்னிடம் சொல்லவே இல்லை. படப்பிடிப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

சீரிஸ் குறித்து அப்டேட்:

அப்படி என்றால் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் வாணி போஜன். அவர் இப்படி கூறி இருப்பதே பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சீரியஸில் நடிக்கும் போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறீர்களா என்று பலரும் அதிர்ச்சியாக என்னிடம் கேட்டனர். ஆனால் கதையில் அம்மாவாக நடிக்கிறோமா பாட்டியாக நடிக்கிறோமா என்பதெல்லாம் முக்கியமில்லை.

கதைதான் மிகவும் முக்கியம் இந்த கதையில் நடிக்காமல் இருந்திருந்தால் இதை ரொம்ப மிஸ் செய்திருப்பேன். மேலும் இதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் நடிக்கிறார். அவர் நடிக்கிறார் என்றாலே அது முக்கியமான ஒரு கதையாகதான் இருக்கும் என்பது என்னுடைய எண்ணம் என்று கூறியவர் இந்த சீரியஸை பார்த்த பிறகு பலரும் என்னிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டார்கள்.

அதற்கு நான் ஆமாம் எனக் கூறியதற்காக எனது தந்தை என்னை கண்டித்தார். இதையே ஒரு ஆண் சொல்லியிருந்தால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே நான் பல இடங்களில் ஆமாம் என்று பதில் சொல்லி வருகிறேன்.

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் இலவச கல்வியை தான் முதலில் கொண்டு வருவேன் என்று கூறி இருந்தார் வாணி போஜன். ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இலவச கல்வி தானே இருக்கிறது என்று இது குறித்து பதில் அளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version