அட்ஜெஸ்ட்மெண்ட்.. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. என்னோட பதில் இது தான்.. வாணி போஜன் பளார்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சின்னத்திரையின் நயன்தாரா என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுகின்ற வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இதையும் படிங்க: “அந்த உறுப்பு கட் ஆகிடுச்சு.. அதுக்காக..” கணவரை பிரிந்தது குறித்து பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்த இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து ஆடை வடிவமைப்பு, விளம்பர வேலைகளையும் பார்த்த இவருக்கு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை வாணி போஜன்..

அந்த வகையில் ஆகா தொடரில் அறிமுகமான வாணி போஜன் அதனை அடுத்து ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாயா தொடரில் நடித்திருந்தார். எனினும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் என்ற சீரியல் தான் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சையும் பேமஸையும் பெற்று தந்தது.

இந்நிலையில் வெள்ளித்திரையில்  தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கக்கூடிய வாணி போஜன் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார்.

தமிழைப் பொறுத்த வரை ஒ மை கடவுளே என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவருக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

இவர் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டு அம்னிசியா, மிரள், லவ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ட்ரிபிள்எக்ஸ், செங்களம், தமிழ் ராஸ்கர்ஸ் போன்ற வெப் சீரியல்களில் நடித்திருக்கிறார். இதில் குறிப்பாக செங்களம் என்ற வெப் சீரியலில் அரசியல்வாதியாக நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

அதுக்கு அவசியம் எனக்கு இல்லை..

இந்நிலையில் தமிழ் சினிமாவை தற்போது ஆட்டி படைத்து கொண்டு இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வாணி போஜன் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்குக் காரணம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி பிரபல நடிகையாக வேண்டும் என்கிற ஆசை தனக்கு இல்லை. மேலும் தற்போது நிறைய பட வாய்ப்புகள் வசம் உள்ளது. அத்தோடு ரசிகர்களின் பாராட்டு போதும் என்ற கருத்தை அவர் முன் வைத்து பேசி இருக்கிறார்.

வாணி போஜனின் பளார் பேச்சு..

மேலும் இது வரை சினிமாவில் வாய்ப்புகள் இவரை தானாகத்தான் தேடி வந்ததாம். அந்த வகையில் விமான பணி பெண்ணாக பணி பார்க்கும் போது தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எனினும் இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம் என அம்மா சொன்னதை அடுத்து அந்த படத்தில் நடிக்காமல் போனதற்கான காரணத்தையும் தெரிவித்த இவர் தனக்கு என்றும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பழக்கம் இல்லை என்ற பளார் பதிலை தந்திருக்கிறார்.

இந்நிலையில் வாணி போஜன் அளித்த இந்த பேட்டியானது வைரலாக இணையங்களில் வருவதோடு தன் திறமையின் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டு இருப்பதால் தான் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்து இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மகளுக்காக கட்டை நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்..

இதனை அடுத்து இவருக்கு இன்னும் சினிமா வாய்ப்புகள் அதிகளவு வந்து கொண்டே இருப்பதால் விரைவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version