இந்த காரணத்திற்காக முன்னணி நடிகர்கள் என்னை Reject பண்ணாங்க..! வலியை பகிர்ந்த வாணி போஜன்..!

வாணி போஜன், மாடலிங் துறையில் இருந்தவர். நிறைய விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்.

அதன்பின், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.

வாணி போஜன்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாணி போஜன், நடிக்க வருவதற்கு முன் 3 ஆண்டுகள், கிங்பிஷர் விமானத்தில், விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா, மாயா, லட்சுமி வந்தாச்சு, தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்த வகையில், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வாணி போஜன் பிரபலமானார்.

அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்த அவர், தொடர்ந்து ஜெய்யுடன் டிரிப்ளஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்தார்.

ஒரு கட்டத்தில் ஜெய்யுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்தனர்.

பிறகு தங்களது சினிமா கேரியர் பாதிக்கப்பட்டதால், இருவரும் தங்களது காதலை பிரேக்கப் செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

லாக்கப், மகான், பாயும் ஒளி நீ எனக்கு, செங்களம், மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வாணி போஜன், டிவி சீரியல் நடிகை என்பதால், தன்னை புறக்கணித்த தமிழ் சினிமா ஹீரோக்கள் குறித்து வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

ரிஜெக்ட் செய்த ஹீரோக்கள்

அந்த நேர்காணலில் நடிகை வாணிபோஜன் கூறியதாவது, எத்தனை ஹீரோக்கள் என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்கன்னு தெரியுமா?

அவங்க டெலிவிஷன்ல பண்ணி இருக்காங்க. அவங்க சினிமாவில் எப்படி ஹீரோயினா பண்ணுவாங்க. நிறைய ஹீரோஸ் அப்படி பேசி இருக்காங்க.

படத்துல நான் நடிக்க கமிட் ஆகி, கையெழுத்து போடற அளவுக்கு போயிடும். அவங்க கடைசியில சார், அவங்க ஒரு டெலிவிஷன் நடிகை அப்படீன்னு சொல்லி வேணாமுன்னு சொல்லிடுவாங்க.

மனசுல ரொம்ப கஷ்டம்

அது ரொம்ப என் மனசுல கஷ்டமாக இருந்துட்டே இருக்கும். இங்க ஒரு திறமைக்கான இடம் இல்லை. இதுக்கு முன்னாடி எங்க இருந்தாங்க அப்படீங்கறது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்துல தான் ஒரு அதிர்ஷ்டமான விஷயமா, விதார்த் கூட ஒரு படம் பண்ணினேன். வெரி ஸ்ட்ராங் ரோல். அதுக்கப்புறம் நிறைய படங்கள் பண்ணினேன்.

சீரியல் ஆர்ட்டிஸ்ட், டிவியில் இருந்து வந்தவங்க அப்படீன்னு என்னை ரிஜக்ட் பண்ணினவங்க படங்களை ஒண்ணு, ரெண்டு நானும் வேணாமுன்னு ரிஜக்ட் பண்ணியிருக்கேன்.

திறமைக்கு மரியாதை தரணும்

என்னுடைய திறமைக்கு மதிப்பு தராத அவர்களுடன் நடிக்க நான் விரும்பவில்லை. எனக்கும் மரியாதை ரொம்ப முக்கியமான விஷயம் என்று கூறியிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

டிவியில் நடித்த நடிகை என்ற ஒரே காரணத்திற்காக ஹீரோ நடிகர்கள் என்னை Reject பண்ணாங்க என்கிற வலியை இந்த நேர்காணல் வழியாக வாணி போஜன் பகிர்ந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version