என்னடா பொண்ணுங்கள வச்சி இப்படி பண்றீங்க.. ஆனால்.. வாணி போஜன் தடாலடி..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதனை படைத்த நடிகர்கள் நிறைய உண்டு. ஆனால் நடிகைகளை பொறுத்த வரை அந்த அளவிற்கு யாரும் பெரிதாக சின்னத்திரையில் இருந்து வந்து கதாநாயகியாக ஆனது கிடையாது.

அப்படியே சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நடிக்க வந்திருந்தாலும் கூட அவர்கள் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளனர். அப்படி சீரியலில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆனவர் நடிகை வாணி போஜன்.

நாடகங்களில் எண்ட்ரி:

2012 முதல் தொலைக்காட்சிகளில் நிறைய நாடகங்களில் நடித்து வந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வந்த ஆகா என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜெயா டிவியில் வெளியான மாயா என்கிற சீரியலில் நடித்தார் வாணி போஜன்.

ஆனால் மாயா சீரியல் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் பிறகு அது தொடராமல் போனது. அதனை தொடர்ந்து தெய்வமகள் என்கிற சன் டிவி சீரியல் நடித்த போதுதான் அதிகமான வரவேற்பு பெற்றார் வாணி போஜன்.

2013ல் துவங்கிய தெய்வ மகள் 2018 வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை அடுத்து அதன் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார் வாணி போஜன்.

சீரிஸில் வாய்ப்பு:

2020இல் வெளிவந்த ட்ரிபிள்ஸ் என்கிற சீரியஸில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் வாணி போஜன். அதனை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். 2012 முதல் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த வாணி போஜன் 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. வழக்கமாக அவர் நடிக்கும் துணை கதாபாத்திரங்களாக இருக்கவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

மலேசியா டு அம்னீசியா என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் வாணி போஜன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி இருக்கிறார் வாணி போஜன். அதில் அவர் கூறும் பொழுது படங்களில் நடிக்கும் நடிகர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்  என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஒரு பேட்டியில் இது குறித்து வாணி போஜன் கூறும் பொழுது பெண்கள் வேலைக்கு சென்றால் பெண்களை சம்பாதிக்க அனுப்பி நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று இயல்பாக கேள்விகள் கேட்பார்கள் ஆனால் அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் சினிமாவில் உள்ள அட்ஜஸ்மென்ட் விஷயங்கள் குறித்து பேசும் பொழுது அப்படி எல்லாம் செய்துதான் பெரிய நடிகை ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று பதில் கூறியிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version