“எனக்கு சத்தியமா புடிக்கல.. இப்படி வந்து நிக்குறா..” – நயன்தாரா குறித்து பிக்பாஸ் வனிதா..!

பிரபல பிக்பாஸ் நடிகை வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா அவருடைய திருமணத்திற்கு அணிந்து வந்த ஆடை குறித்தும், அதனை மறு உருவாக்கம் செய்த பெண்கள் குறித்தும் காரசாரமான தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு காரசாரமான விஷயத்தை உள்ளே செலுத்தி அந்த விஷயத்தை பரபரப்பாக்க கூடியவர் நடிகை வனிதா.

அந்த வகையில், நடிகை நயன்தாரா-வின் திருமண உடை விவகாரத்திலும் தன்னுடைய காரசாரமான பார்வையை புகுத்தி இருக்கிறார்.

பொதுவாகவே நடிகைகள் அணியக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய விஷயங்கள் பெண்கள் மத்தியில் பிரபலமாவது வாடிக்கை தான்.

கே.ஆர்.விஜயாவின் புடவை.. குஷ்புவின் நகைகள்.. ஆரம்பித்து நடிகை நதியாவின் பொட்டு.. நதியாவின் கொண்டை.. என அந்தந்த காலத்தில் நடிகைகளிடம் எந்த விஷயங்கள் அதிகமாக கவரப்படுகிறதோ அந்த விஷயங்களை தங்களுடைய வாழ்க்கையிலும் பயன்படுத்துவது உலகம் முழுக்க இருக்கக்கூடிய பெண்களால் செய்யப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

அதுபோல நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு அணிந்திருந்த சிகப்பு நிற புடவை மற்றும் அவருடைய அணிகலன்கள் ஆகியவற்றை கண்டு ஈர்க்கப்பட்ட சில பெண்கள் தாங்களும் அதே போல மேக்கப் போட்டுக் கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டனர்.

சில பேர் தங்களுடைய திருமணத்திற்கு நடிகை நயன்தாரா போலவே மேக்கப் செய்து கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் இந்த விஷயத்தில் தன்னுடைய காரசாரமான பார்வையை புகுத்தியிருக்கிறார் வனிதா. அவர் கூறியதாவது, நடிகை நயன்தாரா அணிந்திருந்த உடை அவருக்கானது. அவர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக ஒருவரை தொடர்ச்சியாக காதலித்து திருமணத்திற்கு வந்து நிற்கிறாள்..

தமிழ் சினிமாவில் நடித்து சாதித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக நிற்கிறாள்.. ஆனால், நயன்தாரா உடை போலவே பல பெண்கள் அணிவதை நான் பார்க்கிறேன். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அது நயன்தாராவுக்கு மட்டுமானது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார-வுக்கு மட்டுமானது.. என்று ஏக வசனம் பேசுகிறார்.

பெண்கள் தன்னை போலவே உடை அணிவதை நடிகை நயன்தாரா பார்த்தாலே சந்தோஷம் தான் படுவார். என்னுடைய உடை அழகு அவர்களை கவர்ந்திருக்கிறது என்று அவர் மகிழ்ச்சி அடைவார்.

அந்த ஆடையை வடிவமைத்த வடிவமைப்பாளரும் கூட அவருக்கு உண்டான அங்கீகாரமாக கருதுவார். ஆனால், இதில் எதற்குமே சம்பந்தம் இல்லாத நீங்கள் திடீரென உள்ளே வந்து நயன்தாராவின் உடை போலவே மற்ற பெண்கள் அணிவது எனக்கு பிடிக்கவில்லை என பதறிக் கொண்டிருப்பது என்ன வகையான மனநிலை..? என்று தெரியவில்லை என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam