பழம் பெரும் நடிகரான நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மகளாகிய வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து புகழடைந்ததை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர். 1995-ஆம் ஆண்டு வெளி வந்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
வனிதா விஜயகுமார்..
நடிகை மஞ்சுளாவின் மகளாகிய வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்திற்கு பிறகு 1996 இல் மாணிக்கம் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து ஹிட்லர் பிரதர்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 1999-இல் தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து ஓப்பன் டாக்
தமிழைப் பொறுத்த வரை இவர் காக்கை சிறகினிலே, நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற தமிழ் படங்களில் நடித்து ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனதை அடுத்து பிசினஸ்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்து. அதில் போட்டியாளராக பங்கேற்ற இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அத்தோடு தமிழகம் எங்கும் பிரபலமாக பேசப்பட்ட இவர் யூடியூபில் ரிவ்யூ செய்து அதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை பெற்று விட்டார்.
மகளிடம் சொல்லும் விஷயம்..
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நிருபர் கேட்ட கேள்விக்கு சிறப்பான பதிலை தந்திருக்கும் வனிதாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் எதிர்கால தலைமுறைக்கு கண்டிப்பாக போய் சேர வேண்டும்.
ஏனென்றால் அண்மையில் இவர் இவரது அம்மாவின் அருகில் சகோதரிகள் இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். இது போன்ற புகைப்படத்தை வெளியிடுவதற்கு காரணம் என்ன என்று கேட்ட போது சகோதரிகளாக நாங்கள் எப்படி இருந்தோம் என்பதை என் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் அவருடைய அம்மா அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததை நாம் நம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற விஷயத்தை நாசுக்காக கூறி இருந்தார்.
இவரின் இரண்டு சகோதரிகளும் மிகவும் திறமைசாலிகள் என்பதை குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு முறையும் உடையை எப்படி அணிய வேண்டும். மற்றவர் மனம் கவரும் படி எப்படி நடக்க வேண்டும் என்பது போன்ற சின்ன ,சின்ன டிப்ஸ்களை எங்கள் அம்மா எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
வெளிப்படையாக பேசிய வனிதா..
அதனை ஃபாலோ செய்து தான் இன்று வரை நாங்கள் மூவரும் நடக்கிறோம். இது போல என் மகளும் இருக்க வேண்டும். எங்களைப் பார்த்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறார்.
மேலும் என் சகோதரிகள் பற்றி என் மகளிடம் இப்படி பெருமையான விஷயங்களை எடுத்துச் சொல்வதின் மூலம் அவர்களுக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உருவாகும். இந்த உண்மையை வெளிப்படையாக கூறி இருக்கும் வனிதாவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் வனிதாவின் இந்த எண்ணம் உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது மட்டுமல்லாமல் நல்ல விஷயங்களை பெரியவர்கள் கற்றுத் தரும் போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் வளர்த்தக்கூடிய வகையில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.
எனவே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு பெரியவர்கள் விட்டுச் சென்ற நியதிகளை கடைபிடிக்கவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டான பாங்கான விஷயங்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் எதிர்கால தலைமுறை அதை அப்படியே எடுத்துச் செல்லும் என்பதை ஐயம் இல்லாமல் கூறலாம்.
இதையும் படிங்க: பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..