விவாகரத்தான நடிகர் மீது கிரஷ்..! அந்த ஆசையை வெளிப்படையாக போட்டு உடைத்த பிக்பாஸ் வனிதா..!

வாயாடி பெத்த புள்ள யார் இவ என்று கேட்கக் கூடிய வகையில் வாயாடி வனிதா அக்கா வாரிசு நடிகையாக தமிழ் திரை உலகில் களம் இறங்கியதை அடுத்து போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து திரையுலகில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க அதில் போட்டியாளராக பங்கேற்று தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

விவாகரத்தான நடிகர் மீது கிரஷ் ..

அந்த வகையில் ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட பிக் பாஸ் வனிதா அக்கா பிக் பாஸ் ஷோவை ரிவ்யூ செய்து வருவதோடு மட்டுமல்லாமல் தன் மகளையும் அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்க வைத்தார்.

மேலும் வனிதா அக்காவை பற்றி அதிக அளவு உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரையுலகில் வாய்ப்புகளை நழுவ விட்ட இவர் சீரியல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

இதனை அடுத்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலித்து வந்த இவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் விலகி இருந்த நிலையில் பீட்டர் பாலுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தவர்.

இப்படி மூன்று திருமணங்கள் முடிந்த நிலையில் நான்காவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையங்களில் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வனிதா அக்கா அண்மையில் அந்தகன் பட விழாவில் கலந்துகொண்டு தனது பட்டாசு பேச்சாளால் அனைவரையும் கவர்ந்தார்.

அந்த ஆசையை வெளிப்படையாக..

இதற்கு காரணம் விவாகரத்து ஆன அந்த நடிகர் மீது தனக்கு இன்னும் கிரஷ் இருப்பதாக அந்த ஆசையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்தின் அப்பாவை போல் தனக்கு ஓர் அப்பா கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் பிரசாந்த் தான் தன்னுடைய முதல் கிரஷ் என்று சொல்லி சீனி வெடியை கொளுத்தி போட்டதை அடுத்து மேடையில் அந்த நடிகர் வெக்கப்பட்டார்.

அந்தகன் தான் நடிக்கக்கூடிய படம் மட்டுமல்ல அது தனக்கு ஒரு எமோஷனலான படம் என்று கூறினார். இதற்கு காரணம் தன்னுடைய செல்போன் ஒருமுறை தொலைந்து போன போது செல்போன் தொலைந்து விட்டது என்று தான் தியாகராஜன் அங்கிளிடம் சொன்னேன். உடனே இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோனை வாங்கித் தந்தார்.

அந்த போனை தான் நான் தற்போது வரை பயன்படுத்தி வருவதாக சொல்லி இருக்கிறார். மேலும் ஆரம்ப நாட்களில் தனக்கு பிரசாந்த் தான் முதல் கிரஷ் என்று சொல்லி விழா மேடையில் பிரசாந்தை வெட்கப்பட வைத்தார்.

உடைத்த பிக் பாஸ் வனிதா..

அதுமட்டுமல்லாமல் இந்த உண்மையை உடைத்துவிட்ட பிக் பாஸ் வனிதா பிரபுதேவாவை பார்த்து இம்ப்ரஸ் ஆகிவிட்டால் சினிமா துறைக்கு வந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று தான் திரத்துறைக்குள் நுழைந்ததாகவும் அவர் நடிப்பில் வெளிவந்த காதலன் படம் தனக்கு பிடித்தமான படமாகவும் கூறி அனைவரையும் அசத்தி விட்டார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version