நமக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே..! 62 வயசு நடிகரை பார்த்து பிக்பாஸ் வனிதா பகீர்..!

பொதுவாகவே தமிழில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான ஒரு விஷயம் தான். அந்த வகையில் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரும் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர்தான்.

இளமை காலங்களில் சினிமாவிற்கு அறிமுகமான வனிதாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இவரும் நடிப்பின் மீது கவனம் செலுத்தாமல் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார் தனது 19ஆவது வயதிலேயே இவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வனிதா திருமணம்:

அதற்கு பிறகு ஆகாஷ் என்பவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கல்யாணம் தொடர்பான சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு நடிகையாக வனிதா இருந்து வருகிறார்.

ஆகாஷின் விவாகரத்திற்கு பிறகு ஆந்திராவை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்தார் வனிதா விஜயகுமார். ஆனால் அந்த நபருடனும் இவருக்கு அவ்வளவாக செட்டாகவில்லை. பிறகு சில வருடங்களிலேயே அவரையும் விவாகரத்து செய்து விட்டார் வனிதா விஜயகுமார்.

பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்சமயம் அந்த திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாமல் விவாகரத்து பெற்றுவிட்டார். இப்படி மூன்று முறை தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நடிகையாக இவர் இருப்பதால் தொடர்ந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் வனிதா.

இதற்கு நடுவே சர்ச்சையை கிளப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளில் பேசுவதையும் இவர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வனிதா மற்றும் பவர் ஸ்டார் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வந்தன.

பவர் ஸ்டார் திருமணம்:

ரசிகர்கள் வனிதா பவர் ஸ்டாரைதான் திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்களை பரப்பி வந்தனர். ஆனால் அது அவர்கள் நடித்த ஒரு படத்தின் போஸ்டர் என்று அந்த படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் தற்சமயம் வனிதா வைஜயந்தி ஐ.பி.எஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார் .

ந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது அதில் பவர் ஸ்டாரும் கலந்து கொண்டார். அப்பொழுது அதில் பேசிய பவர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய தோழி வனிதாவை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த வனிதா ”என்ன தோழி என்று கூறுகிறீர்கள் நமக்குதான் திருமணம் செய்து வைத்துவிட்டார்களே என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது எங்கேயாவது வெளியூருக்கு சென்றால் நீங்கள் பவர்ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கு நான் இல்லை பவர் ஸ்டார் சீனிவாசனைதான் திருமணம் செய்தேன் என்று கூறுகிறேன் என்று வனிதா அவரை கலாய்த்தபடி பேசி இருந்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam